Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புனித ஜோசப் - புனித பீட்டர் அணிகள் மோதும் 82ஆவது புனிதர்களின் சமர் இன்று ஆரம்பம்
2016-03-04 11:02:50

(நெவில் அன்­தனி)

 

மரு­தானை புனித ஜோசப் கல்­லூ­ரிக்கும் பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 82ஆவது வரு­டாந்த ‘புனி­தர்­களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்றும் நாளையும் நடை­பெ­ற­வுள்­ளது.

 

 

புனித ஜோசப் அணி­யினர்: அமர்ந்­தி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்­து­வ­ல­மாக ப்ரசான்த ரண­வீர (பொறுப்­பா­சி­ரியர்), ஆசிரி பேரேரா (உடற்­த­குதி பயிற்­றுநர்), மைக்கல் அடம்ஸ் (இரண்டாம் நிலை அணி பயிற்­றுநர்), மல்ஷான் ரொட்­றிகோ, அருட்­தந்தை மிலான் பேர்னார்ட் (விளை­யாட்­டுத்­துறை பொறுப்­பா­சி­ச­ரியர்), சந்­த­றுவன் ரொட்­றிகோ (தலைவர்), அருட்­தந்தை ட்ரவிஸ் கேப்­றியல் (கல்­லூரி முதல்வர்), கவின் கேர்ட்லிங் (உதவித் தலைவர்), அசேல பத்­தி­ரன (பயிற்­றுநர்), விமிக்தி பீரிஸ், தரன்த மெனே­ரி­கம (களத்­த­டுப்பு பயிற்­றுநர்), ஆசிரி கல்­தேரா (இரண்டாம் நிலை அணி பொறுப்­பா­சி­ரியர்), நிற்­ப­வர்கள்: சச்­சித்த டி சில்வா, டரியோ தச­நா­யக்க, கவிந்த ஜய­தி­லக்க, ஹவின் பெரேரா, நிப்புன் சும­ன­சிங்க, சாருக்க உல்­லந்­து­பிட்­டிய, ஹரின் குரே, தினேத் மது­ரா­வெல, ஜெஹான் டெனியல், ரெவான் கெலி, ருச்­சிர ஏக்­க­நா­யக்க, தசன் பெரேரா, பஹன் பெரேரா, நிரான் குண­தி­லக்க, ஷெவொன் பொன்­சேகா.


 

புனித ஜோசப் அணிக்கு சந்­த­ருவன் ரொட்­றி­கோவும் புனித பீட்டர் அணிக்கு வினு மொஹொட்­டியும் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர். 

 

இரண்டு கல்­லூ­ரி­களும் இவ் வருடம் தலா 6 முழு வெற்­றி­களை ஈட்­டி­யுள்­ளன. தனிப்­பட்­ட­வர்­க­ளது ஆற்றல் வெளிப்­பா­டு­களை ஒப்­பிட்­டுப்­பார்க்­கும்­போது புனித பீட்டர் கல்­லூரி சற்று பலம்­வாய்ந்­த­தாகத் தென்­ப­டு­கின்­றது.

 

எனினும், கிரிக்கெட் விளை­யாட்டு விசித்­தி­ர­மான முடி­வு­களைத் தர­வல்­லதால் இந்தப் போட்­டியும் பர­ப­ரப்­பாக அமையும் என நம்­பலாம்.

 

புனித ஜோசப் அணி சார்பில் ரெவன் கெலி, ஷெவொன் ஃபொன்­சேகா, மல்ஷான் ரொட்­றிகோ ஆகி­யோரே 500க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ளனர். அத்­துடன், புனித ஜோசப் அணியில் மல்ஷான் ரொட்­றிகோ மாத்­தி­ரமே சதம் குவித்த வீர­ராவார்.

 

சக­ல­துறை வீர­ரான மல்ஷான் ரொட்­றிகோ, ஹரின் குரே ஆகிய இரு­வரும் 60 விக்கெட்­க­ளுக்கு மேல் வீழ்த்­தி­யுள்­ளனர்.

 

 

புனித பீட்டர் அணி­யினர்: அமர்ந்­தி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்து வல­மாக மெனுக்கர் குண­ரட்ன (பயிற்சி ஆசி­ரியர்), மஞ்­சுக பெரேரா (களத்­த­டுப்பு பயிற்­றுநர்), ஷானக்க பெர்­னாண்டோ (உதவிப் பயிற்­றுநர்), ட்ரொய் பார்ட்லட் (விளை­யாட்­டுத்­துறை செய­லாளர்), சனத் சின்­தக்க (சிரேஷ்ட பொறுப்­பா­சி­ரியர்), வினு மொஹொட்டி (தலைவர்), அருட்­தந்தை ட்ரவோ மார்ட்டின் (முதல்வர்), அருட்­தந்தை தில்­லின பெத்தும் (விளை­யாட்­டுத்­துறை இணைப்­பாளர்), ஹஷான் வன­சே­கர (உதவித் தலைவர்), மலிந்த வர்­ண­புர (தலைமைப் பயிற்­றுநர்), வசன்த ஹப்­புத்­தான்­திரி (கனிஷ்ட பொறுப்­பா­சி­ரியர்), கிட்டோ பெர்­னாண்­டோ­புள்ளே (உதவிப் பயிற்­றுநர்), மஹேஷ் டி சில்வா (முகாமையாளர்), மத்திய வரிசையில் சதிஷ் பத்திரகே, ரந்தெல் செனவிரட்ன, டினால் ஜயக்கொடி, சந்துல ஜயமான்ன, லக்ஷின ரொட்றிகோ, தனீஷ வீரக்கூன், அனிஷா பெரேரா, ரவிந்து சில்வா, பின்வரிசையில் சச்சின் பெர்னாண்டோ, ஜெரமி பெர்னாண்டோ, மனேல்கர் டி சில்வா, சன்துஷ் குணதிலக்க, ரன்மித் ஜயசேன, ஆஷாந்த் மல்கர், ஷெலொன் ரொட்றிகோ, இனேஷ் பெர்னாண்டோ, வினுல் குணவர்தன.


 

புனித பீட்டர் துடுப்­பாட்­டத்தில் ல­க்ஷின ரொட்­றிகோ, ஹஷான் வன­சே­கர, ரன்மித் ஜய­சேன ஆகியோர் 650 க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ள­துடன் இம் மூவரும் சதம் குவித்­துள்­ளனர். 

 

அத்­துடன், 450 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றுள்ள அனிஷ்க பெரே­ராவும் சதம் ஒன்றைப் பதிவு செய்­துள்ளார். 

 

பந்­து­வீச்சில் தனீஷ வீரக்கூன், வினு மொஹொட்டி ஆகிய இருவர் 70க்கும் மேற்­பட்ட விக்கெட்­களைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

 

இரண்டு கல்­லூ­ரி­க­ளுக்கும் இடையில் 2015வரை நடை­பெற்று முடிந்­துள்ள 81 புனி­தர்­களின் சமரில் 12 போட்­டி­களில் புனித ஜோசப் கல்­லூ­ரியும் 9 போட்­டி­களில் புனித பீட்டர் கல்­லூ­ரியும் வெற்­றி­பெற்­றுள்­ளன. ஏனைய போட்­டிகள் வெற்­றி­ தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

 

புனித ஜோசப் கல்­லூரி 2008இல் ருவன்த பெர்­னாண்­டோ­புள்ளே தலை­மை­யிலும் புனித பீட்டர் கல்­லூரி 2012இல் ஷெஹான் பெர்­னாண்டோ தலை­மை­யிலும் வெற்­றி­பெற்­றன. 

 

இலங்கை அணியில் இடம்­பெற்­ற­வர்கள்
இரண்டு பாட­சா­லை­க­ளி­லி­ருந்தும் பல வீரர்கள் இலங்கை அணியில் இடம்­பி­டித்­துள்­ள­துடன், தற்­போ­தைய இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் புனித ஜோசப் கல்­லூரி உரு­வாக்­கிய சிறந்த சக­ல­துறை வீர­ராவார்.

 

அத்­துடன், ஏஷ்லி டி சில்வா, சமிந்த வாஸ், ரொஹான் வீரக்­கொடி, மைக்கல் வென் டொட், திசர பெரேரா, திமுத் கரு­ணா­ரட்ன ஆகி­யோரும் புனித ஜோசப் கல்­லூ­ரியின் முன்னாள் வீரர்­க­ளாவர்.

 

ரோய் டயஸ் (இலங்கை அணியின் முன்னாள் உதவித் தலைவர்), ருமேஷ் ரட்­நா­யக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, கௌஷால் லொக்­கு­ஆ­ராச்சி, மலிந்த வர்­ண­புர ஆகியோர் தேசிய அணியில் இடம்­பெற்ற புனித பீட்டர் கல்­லூ­ரியின் முன்னாள் வீரர்­க­ளாவர்.

 

இவ் வரு­டத்­தி­லி­ருந்து புனி­தர்­களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்­டிக்கு டயலொக் ஆசி­யாட்டா பிர­தான அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.