Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்: டக்ளஸின் அலுவலக காணொளி கெமெரா பதிவுகளை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
2016-03-04 08:16:08

(எம்.எப்.எம்.பஸீர்)

 

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களுக்­காக நார­ஹேன்­பிட்­டியில் உள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தவின் தேர்­தல்கள் அலு­வ­ல­கத்தின் சி.சி.ரி.வி.காட்­சி­களை புல­னாய்வுப் பிரி­வுக்கு கைய­ளிக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.  

 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு  தாக்கல் செய்த அறிக்­கை­யை­ய­டுத்தே நீதி­மன்றம் நேற்று இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தது. 

 

இதன்­படி டக்ளஸ் தேவா­னந்தா எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு முன்­ன­தாக பாக் வீதி, இலக்கம் 121, கொழும்பு - 5 என்ற முக­வ­ரியில் உள்ள தனது அர­சியல் அலு­வ­ல­கத்தின் 2012.05.16 ஆம் திக­திக்­கு­ரிய சி.சி.ரி.வி. பதி­வுகள் அடங்­கிய' வன் தட்டை' புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கைய­ளிக்க வேண்டும் என உத்­தரவி­டப்­பட்­டுள்­ளது.

 

தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு விசேட அறிக்கை ஒன்­றினை தாக்கல்  செய்­தனர்.

 

அதில் தமது மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தவின் குறித்த அலு­வ­ல­கத்தின் சி.சி.ரி.வி. பதிவுகள் அடங்கிய வன்தட்டு அவசியம் என குறிப்பிட்டனர். இதனையடுத்தே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.