Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு - 111 பரீட்சை விண்ணப்ப திகதி மார்ச் 28 வரை நீடிப்பு
2016-03-03 08:54:09

(பெரி­ய­போ­ர­தீவு நிருபர்)

 

கடந்த மார்ச் மாதம் முதலாம் திக­தி­யுடன் முடி­வ­டை­வ­தாக இருந்த இலங்கை கல்வி நிரு­வாக சேவை வகுப்பு - 111  இற்­கான போட்டிப் பரீட்சை விண்­ணப்ப முடிவுத் திக­தியை கல்வி அமைச்சு இம்­ மாதம் 28 ஆம் திகதி வரை நீடித்­துள்­ள­தாக இலங்கை ஆசி­ரியர் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

 

இது தொடர்­பாக இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் மட்­டக்­க­ளப்புக் கிளைச் செய­லாளர் பி. உத­ய­ரூபன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் இந்த விப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

 

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை கல்வி நிரு­வாக சேவை­யி­லுள்ள குறை­பா­டு­களை நீக்கக்கோரி இலங்கை ஆசி­ரியர் சங்கம் தொட­ர்பாக மேற்­கொண்ட கவனயீர்ப்பு, வேண்­டுகோள் மற்றும் ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக இந்த வெற்றி கிடைத்­துள்­ளது.

 

ஜன­வரி மாதம் 27ஆம் திகதி கல்வி அமைச்­சிற்கு முன்­பாக நடை­பெற்ற அதி­பர்­களின் நடைப்­ ப­யண ஆர்ப்­பாட்டம் மற்றும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் உய­ர­தி­கா­ரி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடலின் பய­னாக இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

 

இலங்கை கல்வி நிரு­வாக சேவைப் பிர­மாணக் குறிப்­பினை திருத்­துதல் தொடர்­பாக கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம், இலங்கை ஆசி­ரியர் சங்க பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­தி­ய­ளித்­ததைத் தொடர்ந்து போட்டிப் பரீட்­சைக்­கான விண்­ணப்பத் திகதி எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.