Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிங்கராஜா வனப் பிரதேசத்தில் புதுவித பிராணி கண்டுபிடிப்பு: வால் இருந்ததா இல்லையா என்பதனைக் கண்டறிய எக்ஸ்றே சோதனை
2016-03-03 10:03:08

சிங்கராஜா வனப் பிரதேசத்தில் புதுவித பிராணி நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் இதனை இனங்காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது.

 

 

கீரிப்பிள்ளை போன்ற தோற்றத்தைக் கொண்ட இப் பிராணி கறுப்பு மற்றும் கபில நிறமுடைய தோலை உடையதாக காணப்படுகின்றது.

 

இது கீரிப்பிள்ளையின் இனமாக இருக்கலாம் என்ற போதும் இந்த பிராணிக்கு வால் இல்லையெனவும் இந்தப் பிராணி மூன்று கிலோ 330 கிராம் நிறை கொண்டதெனவும் 60 சென்றி மீற்றர் நீளமானதெனவும் வன ஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

சிங்கராஜா வனப் பிரதேசத்துக்கு அருகில் வெத்தாகல மற்றும் பொத்துப்பிட்டியவுக்கு இடையில் இப்பிராணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறெனினும், இப் பிராணி புதுவித பிராணியெனக் கூறமுடியாதென்று வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை புதுவிதமான பிராணி எனக் கூறமுடியாது.

 

 

கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்ததெனத் தெரிகிறது. இருந்தும் இப் பிராணிக்கு வால் இல்லை. இருந்தும் வால் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகின்றது.

 

இதன் வால் உடைந்திருக்கலாம். எக்ஸ்றே மூலம் இதற்கு வால் இருந்ததா? இல்லையா? என்பதைக் கண்டறிய முடியுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.