Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வேனிலிருந்து வீதியில் வீழ்ந்த 2 வயது சிறுவன்; கவனிக்காமல் பயணத்தை தொடர்ந்த சாரதியான தாத்தா
2016-03-02 21:40:58

வேன் ஒன்றிலிருந்த 2 வயதான சிறுவன் வேனின் பின் கதவின் வழியாக வீதியில் வீழ்ந்ததை அறியாமல் சிறுவனின் தாத்தாவான சாரதி, பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த சம்பவம் அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. 

 

 

ஜியாங்சு மாகாணத்தின் சுஸோஹு நகரில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மேற்படி சிறுவன் ஆச்சரியகரமாக உயிர் தப்பியுள்ளான். 

 

இச் சிறுவன் வேனிலிருந்து வீழ்ந்த பின் தனியாக ஓடிச் செல்லும் காட்சி பின்னால் வந்த வாகனமொன்றின் டேஷ்கெம் கெமராவில் பதிவாகியுள்ளது. 

 

போக்குவரத்து நிறைந்த வீதியில் வீழ்ந்த இச் சிறுவன், தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்தான். அதன்பின் அவ் வேன் சென்ற திசையை நோக்கி சிறுவன் ஓட ஆரம்பித்தான். எனினும், அப்போதும் மேற்படி வேன் நிறுத்தப்படவில்லை. 

 

பின்னர் மற்றொரு வாகன சாரதி மேற்படி வேனை துரத்திச் சென்று அதன் சாரதியிடம் விடயத்தைக் கூறினார். பின்னர் அச் சாரதி திரும்பிவந்து, பெண் ஒருவரிடமிருந்து சிறுவனை பெற்றுக்கொண்டார்.

 

 

இச் சாரதி யாங் டெஃபு எனவும் அவர் மேற்படி சிறுவனின் தாத்தா எனவும் இனங்காணப்பட்டுள்ளார். 

 

இச் சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், “நான் சமிக்ஞை விளக்குக்காக காத்திருந்தேன். பின்னர் என்னை ஒரு காரின் சாரதி துரத்திவந்து ஹோர்ன் எழுப்பிக் கொண்டிருந்தார். எனது வேனிலிருந்து குழந்தையொன்று விழுந்ததாக அவர் கூறினார்.  

 

அதன்பின் நான் வாகனத்தை நிறுத்திவிட்டு, எனது பேரனை தேடி திரும்பிச் சென்றேன்” என்றார். 

 

இவ் வாகனம் சில தினங்களுக்கு முன் பின்புறம் அடிபட்டதால் பின்புறக்கதவு தொய்வாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.  

 

வேனிலிருந்து சிறுவன் வீழ்ந்தபோது பதிவாகிய வீடியோவை கீழே காணலாம். 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.