Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதருக்கு பாதணிகள் அன்பளிப்பு
2016-03-02 10:57:38

சாதாரண மனிதர்களே தமக்குப் பொருத்தமான அளவில் பாதணிகளை வாங்குவதற்குத் திணறுவதுண்டு.

 

இந்நிலையில், வெனிசூலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 15.8 அங்குல நீளமான பாதத்தைக் கொண்டுள்ளார்.

 

இதனால், தனக்குப் பொருத்தமான பாதணிகளை பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமப்படுகிறாராம் இந்த இளைஞர். 

 

20 வயதான ஜெய்ஸன் ஒர்லாண்டோ ரொட்ரிகஸ் ஹேர்னாண்டஸ் எனும் இந்த இளைஞர் 7 அடி. 3அங்குலம் (2.21 மீற்றர்) உயரமானவர்.

 

இவர் உலகின் மிக நீளமான பாதத்தைக் கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

 

இவரின் வலது பாதம் 15.8 அங்குலம் (40.1 சென்ரிமீற்றர்) நீளமானது. இடது பாதம் 15.6 அங்குலம் நீளமானதாகும். 

 

தனக்குப் பொருத்தமான பாதணிகள் கிடைக்காமல் சிரமப்பட்ட ஹெர்னாண்டஸுக்கு ஜேர்மனியிலுள்ள பாதணித் தயாரிப்பாளரான ஜோஜ் வெசல்ஸ் விசேட பாதணிகளை தயாரித்து அன்பளிப்புச் செய்துள்ளார். 

 

அண்மையில் சைஸ் 26 அளவிலான 4 சோடி பாதணிகள் ஹெர்னாண்டஸுக்கு கிடைத்தன.

 

கடந்த 40 வருடங்களாக உலகின் மிக உயரமான மனிதர்களுக்கு நான் பாதணிகளை தயாரித்து வழங்குகிறேன்.

 

இவ்வாறு சுமார் 500 ஜோடி பாதணிகளை பலருக்கு நான் வழங்கியுள்ளேன்” என ஜோர்ஸ் வெசல்ஸ் தெரிவித்துள்ளார். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.