Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இளைஞர் ஒரு­வரை 3 பெண்கள் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி விந்­த­ணுக்­களை திருடிச் சென்­ற­ன­ரென முறைப்­பாடு - ஸிம்­பாப்வே பொலிஸார் தெரி­விப்பு
2016-03-01 12:18:45

இளைஞர் ஒரு­வரை பெண்கள் மூவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி அந்த இளை­ஞரின் விந்­த­ணுக்­களை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸிம்­பாப்வே பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். 

 

 

வீதி­யோ­ரத்தில் வாக­னத்­துக்­காக காத்து நின்ற மேற்­படி இளை­ஞரை கார் ஒன்றில் வந்த  பெண்கள் மூவர் ஏற்­றிச்­செல்­வ­தற்கு முன்­வந்­தனர். அதை­ய­டுத்து அந்த இளைஞர் வாக­னத்தில் ஏறிக்­கொண்டார். 

 

சிறிது தூரம் சென்­றபின், அப்­ பெண்கள் மூவரும் மேற்­படி இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவு கொண்­டனர் எனக் கூறப்­ப­டு­கி­றது. 

 

ஸிம்­பாப்­வேயின் புல­வாயோ நகரைச் சேர்ந்த பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், வெள்ளை நிற டொயோட்டா கிறெஸ்டா ரக காரில் வந்த பெண்­களே தமது இலக்­கான மேற்­படி இளை­ஞரை காரில் ஏற்றிச் சென்­றுள்­ளனர்.

 

அந்த இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவில் ஈடு­பட்ட அப்­ பெண்­களில் ஒருவர் மாத்­திரம் கருத்­தடை உறையை பயன்­ப­டுத்­தினார்.

 

ஏனைய மூவரும் பாது­காப்­பற்ற வகையில் பாலியல் உறவில் ஈடு­பட்­டனர்.

 

 

அந்த நபரின் விந்­துகள் கொண்ட சுக்­கி­லத்தை பெற்­றுக்­கொண்­டபின் அவரை பாதை­யோ­ரத்தில் தள்­ளி­விட்டு அப்­ பெண்கள் தப்பிச் சென்­று­விட்­டனர்” எனக் கூறினார். 

 

மேற்­படி இளை­ஞரின் விந்­துக்­களை எதற்­காக இப்­ பெண்கள் திரு­டினர் என்­பதை அப்­ பொலிஸ் பேச்­சாளர் தெரி­விக்­க­வில்லை.

 

ஆனால், ஜூஜூ எனும் ஒரு மாந்­தி­ரீக நட­வ­டிக்­கைக்­காக இவ்­வாறு விந்து திரு­டப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. 

 

ஸிம்­பாப்­வேயில் ஆண்­களை பெண்கள் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி விந்து திரு­டப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­கு­வது இது முதல் தட­வை­யல்ல.

 

2011  ஆண்டு இவ்­வாறு ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது. இதன்­போது ரோஸ்­மேரி சக்­வி­ஸிரா (28), சோபி நோக்­வாரா, (26), நெட்சாய் நோக்­வாரா (24) ஆகிய சகோ­த­ரிகள் மூவர் கத்­திகள் மற்றும் உயி­ருள்ள பாம்­பு­களைக் காட்டி மிரட்டி இளைஞர் ஒரு­வரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி விந்­த­ணுக்­களை திரு­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டனர். 

 

இவர்­களின் கார் விபத்தில் சிக்­கி­ய­தை­ய­டுத்தே அக் ­காரை பரி­சோ­தித்த பொலிஸார் பயன்­ப­டுத்­தப்­பட்ட சுமார் 30 ஆணு­றை­களை கண்­டனர். அதன்­பின்­னரே இவர்கள் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

எனினும், மர­பணு பரி­சோ­த­னைக­ளை­ய­டுத்து, 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீதான குற்­றச்­சாட்டை அதி­கா­ரிகள் வாபஸ் பெற்­றுக்­கொண்­டனர்.

 

இவர்கள் தவ­றாக கைது செய்­யப்­பட்­டனர் என இச் சகோதரிகளின் சட்டத்தரணி துமிசனி எம்தோபெனி தெரிவித்திருந்தார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.