Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மலச்­சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வர்­களால் கூறப்­பட்ட யுவதி கழி­வ­றைக்கு சென்று குழந்தை பிர­ச­வித்தார் - கர்ப்பம் தரித்­தி­ருந்­ததை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­கிறார்
2016-02-23 13:22:59

தான் கர்ப்­பி­ணி­யா­க­வுள்­ளதை அறி­யாத யுவ­தி­யொ­ருவர் மலச்­சிக்கல் உபா­தைக்­குட்­பட்­டுள்ளார் என மருத்­து­வர்­களால் கூறப்­பட்ட நிலையில், கழி­வ­றைக்குச் சென்­ற­போது குழந்­தை­யொன்றை பிர­ச­வித்­துள்ளார். 

 

 

பிரிட்­டனைச் சேர்ந்த சார்லட் பிரையன்ட் எனும் இந்த யுவதி இரு வரு­டங்­க­ளாக இளைஞர் ஒரு­வரை காத­லித்து வரு­கிறார். 

 

அண்­மையில், வேல்ஸ் பிராந்­தி­யத்தின் கர்டிவ் நக­ரி­லுள்ள தனது வீட்டின் கழி­வ­றையில்  அவர் ஆண் குழந்­தை­யொன்றை பிர­ச­வித்தார். ஆனால், இக்­கு­ழந்தை பிறக்­கும்­வரை தான் 9 மாத கர்ப்­பி­ணி­யாக இருந்­ததை அவர் அறிந்­தி­ருக்­க­வில்­லையாம்.

 

3 மருத்­து­வர்கள் தன்னை சோதித்­த­போ­திலும் அவர்­களும் தான் கர்ப்­பிணி என்­பதை கண்­ட­றி­ய­வில்லை என சார்லட் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக சார்லட் கூறு­கையில், “எனக்கு முது­கு­வலி ஏற்­பட்­டி­ருந்­தது. மருத்­து­வர்­க­ளிடம் சென்­ற­போது, ஒரு மருத்­துவர், தசை­களில் வீக்கம் ஏற்­பட்­டுள்­ளதாக கூறி வலி நிவா­ரண மருந்­து­களைக் கொடுத்தார். 

 

மற்­றொரு மருத்­துவர் எனது வயிற்றை சோதித்­தபின், எனக்கு மலச்­சிக்கல் ஏற்­பட்­டுள்­ளதாக கூறினார். அவர் எனக்கு மல­மி­ளக்கி மருந்­து­களை எழு­திக்­ கொ­டுத்தார். 

 

நான் வீட்­டுக்குச் சென்று அம்­ ம­ருந்­து­களில் ஒன்றை உட்­கொண்­டபின் கழி­வ­றைக்கு செல்ல வேண்­டு­மென்ற உணர்வு ஏற்­பட்­டது. கழி­வ­றையில் அமர்ந்­ததும் எனது கால்­க­ளுக்­கி­டையில் ஏதோ விசித்­தி­ர­மாக உணர்ந்தேன். நான் முக்­கிக்­கொண்டு கீழே பார்த்­த­போது, என்னை பார்த்­த­வாறு ஒரு முக­மொன்று இருப்­பதைக் கண்டு திடுக்­கிட்டேன். 

 

 

அவ்­வே­ளையில் எமது வீட்டில் எனது சகோ­தரர் அடம் பிரையன்ட் (26) இருந்தார். நான் சத்­த­மிட்டு எனது சகோ­த­ரரை அழைத்து ‘எனக்கு ஒரு குழந்தை கிடைத்­துள்­ளது’ எனக் கூறினேன். அவர் முட்­டாள்­த­ன­மாக பேசாதே என்றார்.

 

அவர் படிக்­கட்டில் இறங்கி வந்­த­போது, நான் கையில் குழந்­தை­யுடன் இருந்தேன்” என்றார். பின்னர் அக்­ கு­ழந்­தையை துவாய் ஒன்­றினால் போர்த்திக் கொண்டார் சார்லட்.

 

அம்­பியூலன்ஸுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­வுடன் 10 நிமி­டங்­க­ளின் பின் அம்­பியூலன்ஸ் வந்­தது. அதி­லி­ருந்த மருத்­துவ ஊழியர் ஒருவர் தொப்­புள்­கொ­டியை துண்­டித்தார். பின்னர் இவர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

 

7 இறாத்தல் 4 அவுன்ஸ் எடை கொண்ட அக்­ கு­ழந்தை வேல்ஸின் பல்­கலைக்­க­ழக வைத்­தி­ய­சா­லையில் அவ­ச­ர­சி­கிச்சைப் பிரிவில் வைத்து பரா­ம­ரிக்­கப்­பட்­டது. 

 

பின்னர் தனது காதலர் டேனியல் ஹியூஸுக்கு (25) தனது மகனின் புகைப்­ப­டத்தை அனுப்பி, டேனியல் ஹியூஸ் தந்­தை­யா­கி­யுள்­ளதை தெரி­வித்­தாராம் சார்லட்.

 

“என்னைப் போலவே அவரும் முதலில் அதிர்ச்­சி­ய­டைந்தார். நான் ஜோக்­க­டிப்­ப­தாக அவர் கூறினார். நான் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­மைக்­கான எந்த அறி­கு­றியும் இருக்­க­வில்லை.

 

எனக்கு ஒழுங்­காக மாத­விடாய் ஏற்­பட்­டது. வயிற்றில் எந்த அசை­வையும் நான் உண­ர­வில்லை. எனது உடற்­ப­ருமன் சற்று அதி­க­ரித்­தது. அது நான் அதி­க­மாக கேக் உட்­கொண்­டதால் ஏற்­பட்­டது என நான் எண்­ணினேன். 

 

இடுப்பில் வலி ஏற்­பட்­ட­போது அது பிர­சவ வலியின் ஆரம்பம் என நான் எண்­ணவே இல்லை.

 

எனக்கு மலச்­சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மல மிளக்கி மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்தமை வேடிக்கையானது” என்கிறார் சார்லட் பிரை யன்ட். மேற்படி ஆண் குழந்தைக்கு ஜோஷுவா என பெயரிட்டுள்ளனர்.

 

அது மிக அழகான ஒரு குழந்தை. நானும் டேனியலும் இக் குழந்தையை வெகுவாக நேசிக்கின்றோம்” எனவும் சார்லட் தெரிவித்துள்ளார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.