Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்­திய இரா­ணுவ நீதி­மன்ற தீர்ப்­பினால் சர்ச்சை
2016-02-23 13:08:10

எகிப்தைச் சேர்ந்த நான்கு வய­தான சிறு­வ­னொ­ரு­வ­னுக்கு கொலைக் ­குற்றச்­சாட்­டு­களின் பேரில் அந்­ நாட்டு நீதி­மன்­ற­மொன்று ஆயுள் தண்­டனை விதித்­துள்­ளது.

 

அதுவும் இச் ­சி­றுவன் 1 வய­தா­ன­வ­னாக இருந்­த­போது இக் ­குற்­றங்­களைப் புரிந்­த­தாக கூறப்­ப­டு­வது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 

2014 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பான வழக்கில் மேலும் பல­ருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச்­ சி­று­வனின் பெயரும் சேர்க்­கப்­பட்­டது. 


4 கொலைகள், 8 கொலை முயற்­சிகள், அரச சொத்­து­களை சேதப்­ப­டுத்­தி­யமை, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை அச்­சு­றுத்­தி­யமை முத­லான குற்­றங்­களைப் புரிந்­த­தாக இச் ­சி­றுவன் மீது குற்­றச்­சாட்டு பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

 

மேற்­படி வழக்கை விசா­ரித்த கெய்ரோ நக­ரி­லுள்ள நீதி­மன்றம் இச்­ சி­று­வ­னுக்கும் மேலும் 115 பேருக்கும் ஆயுள் தண்­டனை விதித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­தது. இத்­ தீர்ப்­பின்­போது மேற்­படி சிறுவன் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை. 

 

2014 ஜன­வரி 3 ஆம் திகதி மேற்­படி குற்­றச்­செ­யல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. ஆனால், 2012 செப்­டெம்­பரில் பிறந்த அஹ்மட் மன்சூர் கார்­னிக்கு அப்­போது ஒன்­றரை வயது மாத்­தி­ரமே.

 

இந்த வயதில் ஒரு குழந்­தை­யினால் இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களை மேற்­கொள்ள முடி­யுமா என பலர் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். 

 

இது தொடர்­பாக  அஹ்மட் மன்சூர் கார்­னியின் சட்­டத்­த­ர­ணி­யான பைஸால் அல் சயீட் கூறு­கையில், “இவ் ­வ­ழக்கில் அஹ்மட் மன்சூர் கார்­னியின் பெயர் அரச பாது­காப்புப் படை­யி­னரால் தவ­று­த­லாக சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

 

இச்­ சி­றுவன் 2012 செப்­டெம்­பரில் பிறந்­ததை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பிறப்புச் சான்­றி­தழை நாம் நீதி­மன்­றத்­துக்கு வழங்­கினோம். அதை நீதி­மன்ற உத்­தி­யோ­கத்­தர்கள் நீதி­ப­தி­யிடம் ச­மர்ப்­பிக்­க­வில்லை.

 

பின்னர் இவ் வழக்கு இராணுவ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் இச் சிறுவன் ஆஜராகாத நிலையிலேயே இத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை நீதிபதி முழுமையாக வாசிக்கவில்லை என்பதை இது நிரூபிக்கிறது” என்றார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.