Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியையிடம் நஷ்ட ஈடு கோரி மாணவன் வழக்கு
2016-02-23 12:24:36

அமெரிக்காவைச் சேர்ந்த பாடசாலை மாணவவர்கள் சிலருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆசிரியைக்கும் உள்ளூர் கல்வி அதிகாரிகளுக்கும் எதிராக மேற்படி மாணவர்களில் ஒருவன் வழக்குத் தொடுத்துள்ளான்.

 

லொஸ் ஏஞ்சல்ஸ் நகர பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றிய மிஷெல் யேஹ் எனும் 28 வயதான யுவதி தனது மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் ஏனைய இரு மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். 

 

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிஷெல் யேஹ்வுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜனவரி 15 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

 

தற்போது மிஷெல் யேஹ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவன், மிஷெல் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளான்.

 

தனது ஆசிரியையான மிஷெல் யேஹ், தன்னை டிஸ்னி லேன்ட் உட்பட பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றதுடன் பரிசுப் பொருட்களையும் வழங்கினார் என இம் மாணவன் தெரிவித்துள்ளான்.

 

“சுற்றுலா சென்று திரும்பிவந்தபின் அவர் எனது வீட்டுக்கு வந்து என்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என தற்போது 16 வயதான மேற்படி மாணவன் தெரிவித்துள்ளான்.

 

இவ்வாறு பல தடவைகள் தன்னுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டாரெனவும் அப்போது தான் 15 வயதானவனாக இருந்ததாகவும் இம் மாணவன் கூறியுள்ளான்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.