Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆர்ஜென்டீனாவில் சிறிய டொல்பின் இறந்தமைக்கு மக்களின் செல்பீ ஆர்வம் காரணமில்லையாம்
2016-02-23 12:13:08

ஆர்ஜென்டீனாவில் கரையொதுங்கிய சிறிய டொல்பின் ஒன்றுடன் செல்பீ படம்பிடித்துக்கொள்வதற்கு பெரும் எண்ணிக்கையானோர் முயற்சித்ததால், அந்த டொல்பின் உயிரிழந்ததாக கடந்த வாரம் செய்தி வெளியாகியது.

 

 

ஆனால், மக்களின் செல்பீ பிடித்துக்கொள்ள முயன்றவர்களால் இந்த டொல்பின் இறக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
பிரேஸில், ஆர்ஜென்டீனா, உருகுவே போன்ற நாடுகளில் அவதானிக்கப்பட்ட அரிய வகையான டொல்பின் ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியது. 

 

 

இந்த டொல்பினுடன் உல்லாசப் பயணிகள் காணப்படும் கைப்படங்களை ஹேர்னன் கொரையா என்பவர் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

 

அதையடுத்து, அந்த டொல்பினை மீண்டும் கடலில் விடாமல், அதனுடன் செல்பீ படம்பிடித்துக்கொள்வதற்கு சுற்றுலா பயணிகள் முயற்சித்ததன் மூலம் இந்த டொல்பின் இறந்தாக ஆர்ஜென்டீன வனஜீவராசிகள் பாதுகாப்பு தொண்டர் அமைப்பொன்று தெரிவித்தது.

 

இச்செய்தி உலகின் பல நாடுகளின் ஊடகங்களில் வெளியான நிலையில், ஏராளமானோர் மேற்படி சுற்றுலா பயணிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

எனினும், சுற்றுலா பயணிகளால் அந்த டொல்பின் கொல்லப் படவில்லை எனவும், கரையொதுங்கியபோதே அது உயிரிழந்து காணப்பட்டது எனவும் ஆர்ஜென்டீன ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

 

மேற்படி புகைப்படங்களைப் பிடித்த ஹேர்னன் கொரையா அளித்த செவ்வியில், அன்றைய தினம் மேற்படி கடற்கரையில் பல டொல்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியதாக தெரிவித்தார். 

 

அந்த சிறிய டொல்பினை மக்கள் மீண்டும் நீரில் விட்ட போதிலும் அது மீண்டும் கடலுக்குள் செல்லவில்லை என அவர் கூறியுள்ளார். 
௦௦௦௦௦௦௦௦௦௦

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.