Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மலேஷிய பொலிஸாரில் 10 சதவீதமானோருக்கு அதிக உடற்பருமன் எடையை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரம்
2016-02-17 10:40:02

மலேஷியாவில் அதிக உடற்பருமன் கொண்ட பொலிஸார் தமது எடையை குறைக்க வேண்டும் என அந் நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

மலேஷியாவிலுள்ள 1,22,000 பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 11,000 பேர் அதாவது, சுமார் 10 சதவீதமானோர் மிக அதிக உடற்பருமனுடன் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனால் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் குறைவாக உள்ளதால் மலேஷிய அரசுக்கு வருடாந்தம் மில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்படுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

இப் பொலிஸாரில் பலருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய நோய்களும் ஏற்பட்டுள்ளன.

 

தினமும் 560 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை பெறுகின்றனர் என மலேஷிய பொலிஸ் முகாமைத்துவப் பிரிவுப் பணிப்பாளரான ஸுல்கிபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

 

2015 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாரடைப்பு, நீரிழிவு போன்றவன்றினால் உயிரிழந்தனர் எனவும் அவர் தெரிவித்தார். இந் நிலையில் அதிக பருமன் கொண்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் தமது எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

இதனால் அதிக எடை கொண்ட மலேஷிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதுடன் உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். 

 

40 வயதான மொஹமமட் ராயிம் ஜெமாஹிர் எனும் பொலிஸ் அதிகாரி 102 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளார்.  

 

தனது எடையை 16 கிலோவினால் குறைப்பதற்குத் தான் திட்டமிட்டுள்ளதாகக் கூறும் அவர், “முன்னர் நான் உணவை காணும் போதெல்லாம் அதை உட்கொள்வேன். இப்போது அவசியமானால் மாத்திரமே உட்கொள்கிறேன்” என்கிறார். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.