Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
திருமணத்துக்கு முன் கணவர் கொடுத்த காசோலை திரும்பி வந்ததால் 13 வருடங்களின் பின் வழக்குத் தொடுத்த மனைவி
2016-02-17 10:17:38

அபுதாபியைச்  சேர்ந்த பெண்ணொருவர், தமது திருமணத்துக்கு முன்னர் கணவர் கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால், அப் பணத்தை வழங்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

 

இவர்களின் திருமணம் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 

அல் அய்ன் நகரைச் சேர்ந்த இப் பெண்ணுக்கும் நபர் ஒருவருக்கும் 13 வருடங்களுக்கு முன் திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டது.

 

அதன்பின் மணமகனான மேற்படி நபர் இத்திருமண நிச்சயதார்த்தத்திலிருந்து விலகினார். பின்னர் மீண்டும் அவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.

 

தான் இனி ஒருபோதும் இவ்வாறு விலகிச்செல்லப் போவதில்லை எனவும் அப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளித்த அந் நபர், இதற்கான உத்தரவாதமாக இப் பெண்ணுக்கு ஒரு இலட்சம் றியால்கள் பெறுமதியான காசோலையை வழங்கினாராம். 

 

அதன்பின் இவர்களின் திருமணம் நடைபெற்றது. கடந்த 13 வருட காலத்தில் 3 பிள்ளைகளையும் இத் தம்பதியினர் பெற்றனர். 

 

ஆனால், அண்மையில் இவர்களுக்கிடையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டபோது, மேற்படி காசோலையை புதிய திகதியிட்டு அப் பெண் வங்கியில் வைப்பிலிட்டார். 

 

ஆனால், அவரின் கணவரின் வங்கிக் கணக்கில் பணமில்லை எனக்கூறி அக்காசோலை திரும்பி வந்தது. 

 

இதையடுத்து இப்பணத்தை தனக்கு வழங்குமாறு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுத்தார்.

 

ஆனால், மேற்படி காசோலையானது அப்பெண்ணை திருமணம் செய்வதற்கான உத்தரவாதமாகவே வழங்கப்பட்டது எனவும் தற்போது அப்பெண்ணுக்கு அவரின் கணவர் வேறு பணம் எதையும் வழங்க வேண்டிய கடப்பாட்டில் இல்லை எனவும் அக் கணவரின் சட்டத்தரணி வாதாடினார். 

 

இவ் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.