Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொப்கோர்ன் நிறுவனத்துக்கு எதிராக பொப்பிசை சக்கரவர்த்தியின் நிறுவனம் வழக்கு
2016-03-03 11:21:24

பொப்கோர்ன் நிறுவனமொன்றுக்கு எதிராக, மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

 

 

பாடகர் மைக்கல் ஜக்ஸனின் நிறுவனத்துக்கும் பொப்கோர்ன் எனும் சோளப்பொரி நிறுவனமொன்றுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் என எண்ணுவது கடினம்.

 

ஆனால், அமெரிக்க பொப்கோர்ன் நிறுவனமொன்று இத்தகைய வழக்குக்கு முகம் கொடுத்துள்ளது.

 

 

பாடகர் மைக்கல் ஜக்ஸன் பொப்பிசை சக்கரவர்த்தி, அதாவது 'கிங் ஒவ் பொப்' ( King of Pop) என அழைக்கப்பட்டவர்.

 

இந் நிலையில், கிங்ஒவ்பொப் (KingOfPop.com) எனும் இணையத்தளம் நிறுவனமொன்று பொப்கோர்ன் (சோளப்பொரி) விற்பனை செய்துவருகிறது.

 

KingOfPop எனும் பெயரானது, பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மிகப் பிரபலமான புனைபெயரைப் போல் உள்ளது என மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமான ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் கூறுகிறது.

 

பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனுக்குச் சொந்தமானதாக மைக்கல் ஜக்ஸன் எஸ்டேட் எனும் நிறுவனம் விளங்குகிறது.

 

2009 ஆம் ஆண்டில் மைக்கல் ஜக்ஸன் மறைந்த பின்னர் அவரின் சொத்துக்கள், அவர் மீதான வழக்குகள் முதலியவற்றை இந் நிறுவனமே கையாள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் கடந்த வாரம் இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 

பொப்கோர்னை 'பொப்' என எவரும் அழைக்கமாட்டார்கள் என ஜக்ஸன் எஸ்டேட் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

KingOfPop.com இணையத்தளத்தை முடக்க வேண்டும் எனவும் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது.

 

 

மைக்கல் ஜக்ஸனின் நெவர்லேண்ட் விற்பனைக்கு வருகிறது. 
இதேவேளை, மைக்கல் ஜக்ஸனின் மாளிகை அடங்கிய நெவர்லேண்ட் (Neverland) தோட்டத்தை விற்பனை செய்வதற்கு ஜக்ஸன் எஸ்டேட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

கலிபோர்னியா மாநிலத்தின் லோஸ் ஒலிவோஸ் பகுதியில் அமைந்துள்ள நெவர்லேண்ட், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவுடைய பிரமாண்ட தோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதன் ஆரம்ப விலையாக 10 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 1420 கோடி ரூபா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

1987 ஆம் ஆண்டு 1.95 கோடி டொலர்களுக்கு இந்த தோட்டத்தை வாங்கிய மைக்கல் ஜக்ஸன் அதற்கு நெவர்லேண்ட் எனப் பெயரிட்டார்.

 

 

1988 முதல் 2009 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அங்கு மைக்கல் ஜக்ஸன் வசித்தார்.

 

ரயில் நிலையம், களியாட்டப் பூங்காக்கள் முதலானவற்றையும் உள்ளடக்கிய நெவர்லேண்ட் சுற்றுலா பயணிகள் பார்வையிட விரும்பும் ஓர் இடமாகவும் விளங்குகிறது.

 

மைக்கல் ஜக்ஸனின் மகள் பாரிஸ் ஜக்ஸன், 2013 ஆம் ஆண்டில் அங்கு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.