Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
8 வாரங்களே உயிர்வாழ்வார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள யுவதி வித்யா; உயிரைக் காப்பாற்ற குருத்தணு நடைகொடையாளர்களுக்கு அழைப்பு
2016-02-29 10:04:48

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையிலுள்ள பிரிட்டனில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தனது உயிரைக் காப்பாற்ற குருத்தணு (Stem cell) தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு)  தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

 

24 வயதான வித்யா அல்போன்ஸ் எனும் இந்த யுவதி, லண்டன் வோல்தம்ஸ்டோ பகுதியை சேர்ந்தவர்.  பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக உயர்கல்வி கற்றுவந்தார். 

 

காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வித்யா சென்றபோது, அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் 'லூக்கிமியா' என்னும் இரத்தப் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

 

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவாகும் இடத்தில் ஏற்படுவதாகும்.

 

மேலும் சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்ற அதிர்ச்சித் தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

சில வாரங்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா மேலதிக சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு உடனடியாக எலும்பு மச்சை குருத்து அணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை செய்யாவிட்டால் இன்னும் எட்டு வாரங்களில் இறந்துவிடுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து அவரது சகோதரரின் குருத்து அணுவை மருத்துவர்கள் சோதித்ததில் 50 சதவீதம் மட்டுமே ஒத்துப்போயுள்ளதாம்.

 

பிரிட்டனில் அவருக்குப் பொருத்தமான குருத்தணு நன்கொடையாளரை தேடிக்கொள்ள முடியவில்லை. 

 

எனவே அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Help Save V’s Life எனும் பேஸ்புக் பக்கத்தின் மூலமும் இதற்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

 

மேற்படி பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ள வித்யா, 'எனது பெயர் வித்யா. AML Leukemia வினால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயதான ஒரு மாணவி. எனது மரபணுக்களுடன் ஒத்துப்போகக் கூடிய குருத்தணு நன்கொடையாளர் ஒருவரை தேடிக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 

 

“Anthony Nolan”, “Delete Blood Cancer “, “British Bone Marrow Registry”  ஆகிய பதிவுகளில் ஒன்றில் இணைவதன் மூலம் நீங்கள் பொருத்தமானவரா எனப் பாருங்கள்.  எனது அல்லது மேலும் ஆயிரக்கணக்கா னோரின் உயிரைக் காப்பாற்றலாம்' எனத் தெரிவித்துள்ளார். 

 

'ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையாக உள்ளது.

 

இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக வேறு யாருக்காவது நன்மை ஏற்படும்' என வித்யா கூறுகிறார்.

 
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் வித்யா தொடர்பான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். 

 

ஹரிபொட்டர் நாவல்கள் மூலம் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜே.கே. ரோலிங்கும் இவர்களில் ஒருவராவார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.