Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வங்குரோத்தானதாக அறிவித்துக்கொண்ட பின், டொலர் கட்டுகளுடன் தோன்றும் புகைப்படங்களை வெளியிட்டதால் நெருக்கடியில் சிக்கிய பாடகர்
2016-02-24 10:51:27

தான் வங்­கு­ரோத்து நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­துக்­கொண்ட பிர­பல பாட­கர்­களில் ஒரு­வ­ரான 50 சென்ட், பெரு­ம­ளவு நாண­யக்­கட்­டு­க­ளுடன் காணப்­படும் புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டதால் நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ளார்.

 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கேர்ட்டிஸ் ஜேம்ஸ் ஜக்ஸன் எனும் பெயர் கொண்ட இவர், இசைத்­து­றையில் 50 சென்ட் எனும் பெயரால் அறி­யப்­பட்­டவர். 

 

இவரின் பாடல் அல்­பங்களில் 3 கோடி பிர­தி­க­ளுக்கு அதி­க­மாக பிர­திகள் விற்­ப­னை­யா­கின. கிரம்மி விரு­துகள் உட்­பட பல விரு­து­களை வென்­றவர் இவர்.

 

50 சதம் என்ற அர்­த்தத்தில் 50 சென்ட் என பெயர் சூட்­டிக்­கொண்­ட­போ­திலும் பெரும் கோடீஸ்­வ­ரர்­களில் ஒரு­வ­ராக விளங்­கினார்.

 

அவரின் சொத்து மதிப்பு 14 கோடி அமெ­ரிக்க டொலர் சுமார் 1970 கோடி ரூபா என போர்ப்ஸ் சஞ்­சிகை மதிப்­பிட்­டி­ருந்­தது.

 

பாலியல் வீடியோ தொடர்பான வழக்கொன்றில் பெண்ணொருவருக்கு இவர் 70 இலட்சம் டொலர் (சுமார் 140 கோடி ரூபா) நஷ்ட ஈடு வழங்க வேண்­டு­மென கடந்த வருடம் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. 

 

 

அதை­ய­டுத்து, தான் வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு கோரி அவர் அமெ­ரிக்க நீதி­மன்றில் கடந்த ஜூலை மாதம் மனு­ தாக்கல் செய்தார்.

 

வங்­கு­ரோத்­தா­ன­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள், தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை மீள ஒழுங்­கு­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அவ­காசம் வழங்கும் வகையில், அவர்­களின் கடன்­களை செலுத்தும் நிர்ப்­பந்­தத்­தி­லி­ருந்து தற்­கா­லிக பாது­காப்பு அளிக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இதனால், பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கும் பிர­ப­லங்­களும் தாம் வங்­கு­ரோத்­தா­கிவிட்­ட­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வது வழக்கம்.

 

எனினும், பல கோடி டொலர் சொத்­து­களைக் கொண்­டி­ருந்த பாடகர் 50 சென்ட் 70 லட்சம் டொலர் நஷ்ட ஈட்டை செலுத்த முடி­யா­தி­ருப்­ப­தாக கூறி­யமை பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

 

 

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, டொலர் நோட்­டுகள் நிறைந்த கட்­டிலில் தான் அமர்ந்­தி­ருக்கும் புகைப்­படம் உட்­பட தனது செல்­வச்­செ­ழிப்பை வெளிப்­ப­டுத்தும் பல புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் 50 சென்ட் வெளி­யிட்­டுள்ளார். 

 

100 டொலர் நாண­யத்­தாள்கள் கொண்ட பணக்­கட்­டுகள் அப்­புகைப்­ப­டங்­களில் காணப்­ப­டு­கின்­றன.

 

பாடகர் 50 சென்ட்டின் வங்­கு­ரோத்து மனுவை விசா­ரித்து வரும் நீதி­பதி ஆன் நெவின்ஸ், டொலர் கட்­டு­களால் மூடப்­பட்ட கட்டில் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டதன் நோக்கம் என்ன என்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

 

வங்­கு­ரோத்­தா­ன­தாக உரிமை கோரும் விட­யத்தில் வெளிப்­ப­டைத்­தன்மை மிக அவ­சியம் என நீதி­பதி ஆன் நெவின்ஸ் கூறினார். 

 

'சொத்­து­களை வெளிப்­ப­டுத்­தாமை மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை­யின்மை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் குறித்து நான் கரி­சனை கொண்­டுள்ளேன்' என அவர் தெரி­வித்தார்.

 

 

தற்­போது 40 வய­தான 50 சென்ட், முன்னாள் அமெச்சூர் குத்துச்சண்டை வீரராவார். பிரபல குத்துச் சண்டை வீரர் புளோய்ட் மேவெதரின் நெருங்கிய நண்பராகவும் 50 சென்ட் விளங்கினார். 

 

 

ஆனால், பின்னர் இவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. மேவெதர் அவ்வளவு சிறந்த வீரர் அல்ல என 50 சென்ட் விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.