Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நெருக்கடியில் சிக்கிய சக பாடகிக்கு 3.6 கோடி ரூபா நன்கொடை வழங்கும் பாடகி டெய்லர் ஸ்விப்ட்
2016-02-23 15:20:43

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த உலகப் புகழ்­பெற்ற பாடகி டெய்லர் ஸ்விப்ட், அந்­நாட்டின் மற்­றொரு பிர­பல பாட­கி­யான கேஷா­வுக்கு 250,000 அமெ­ரிக்க டொலர் (சுமார் 3.6 கோடி ரூபா) நன்­கொடை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

 

பாடகி கேஷா, தனது 18 ஆவது வயதில் டாக்டர் லூகே எனும் இசைத்­தட்டு தயா­ரிப்­பா­ள­ரினால் ஒப்­பந்தம் செய்­யப்­பட்டார்.

 

டாக்டர் லூகே ஊடாக வெளி­யி­டப்­பட்ட கேஷாவின் இசை அல்­பங்­க­ளுக்கு அதிக வர­வேற்பு கிடைத்­தன. இசைத்­து­றைக்­காக 13 விரு­து­க­ளையும் கேஷா வென்றார். 

 

ஆனால், பின்னர் கேஷா­வுக்கும் டாக்டர் லூகே­வுக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. ஒரு கலைஞர் என்ற வகையில் கேஷாவின் வளர்ச்­சி­யை லூகேவின் நிறு­வனம் தடுப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. 

 

லூகே­வி­ட­மி­ருந்து பாடகி கேஷா விலக விரும்­பினார். எனினும், கையெ­ழுத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் கார­ண­மாக கேஷா­வினால் விலக முடி­ய­வில்லை.

 

அதை­ய­டுத்து, லூகே­வு­ட­னான ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து கேஷாவை விடு­விக்க வேண்டும் எனக் கோரி பொது­மக்­க­ளிடம் கையெ­ழுத்து சேக­ரிக்கும் நட­வ­டிக்­கை­யையும் கேஷாவின் ரசிகர் ஒருவர் 2013 ஆம் ஆண்டு ஆரம்­பித்தார். தற்­போது 10,000 இற்கும் அதி­க­மானோர் அந்த மக­ஜரில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.


தனக்கு டாக்டர் லூகே போதை­யூட்டி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­டு­ப­டுத்­தி­ய­தா­கவும் பாடகி கேஷா குற்றம் சுமத்­தினார். 

 

கடந்த இரு வரு­ட­கா­ல­மாக கேஷாவின் பாடல் எதுவும் வெளி­யா­க­வில்லை.  இந்­நி­லையில், டாக்டர் லூகே­வுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்­பட மறுத்த கேஷா, லூகே­வு­ட­னான ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து தன்னை விடு­விக்கக் கோரினார். 

 

இது தொடர்­பாக நியூயோர்க் நீதி­மன்­ற­மொன்றில் வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. மேற்­படி ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து கேஷா விலக முடி­யாது என கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்­ப­ளிக்கப்பட்டது.

 

இத்­ தீர்ப்பை கேட்டு நீதி­மன்­றத்­தி­லேயே கண்ணீர் விட்டு அழுதார் கேஷா. இவ் வி­வ­கா­ரத்தில் இசைத்­து­றை­யினர் பலர் கேஷா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.

 

 

இதே­வேளை, கேஷா­வுக்கு 2,50,000 டொலர் நன்­கொடை வழங்­கு­வ­தாக பிர­பல பாட­கி­யான டெய்லர் ஸ்விப்ட் (26) தெரி­வித்­துள்ளார்.

 

 

பாடல் எதையும் வெளி­யிட முடி­யாத நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் கேஷாவின் பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுவதற்காக இந்த நன்கொடையை டெய்லர் ஸ்விப்ட் வழங்குகிறார் என அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.