Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சபோவின் பாதுகாப்பு குறித்து மனைவி அச்சம்
2016-02-23 15:00:50

மெக்­ஸி­கோவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜோகுய்ன் எல் சபோ கூஸ்­மனின் பாது­காப்பு தொடர்­பாக தான் அச்சம் கொண்­டுள்­ள­தாக அவரின் மனை­வி­யான முன்னாள் அழ­கு­ராணி எம்மா கொரோனெல் அய்­புரோ கூறி­யுள்ளார். 

 

பாது­காப்­பு­ மிக்க சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் தப்பிச் சென்ற எல் சபோ கூஸ்மன், கடந்த மாதம் 8ஆம் திகதி மெக்­ஸிகோ படை­யி­னரால் மீண்டும் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 

எல் சபோ கைது செய்­யப்­பட்ட பின்னர் அவரின் மனை­வி­யான எம்மா கொரோனெல் அய்­புரோ முதல் தட­வை­யாக, அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஸ்பானிய மொழி தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யொன்­றுக்கு செவ்வி அளித்­துள்ளார். 

 

தனது அன்­புக்­கு­ரிய கண­வரை உலகின் மிக பயங்­க­ர­மான கிரி­மி­ன­லாக மெக்­ஸிகோ அதி­கா­ரிகள் மாற்­றி­யுள்­ளனர் என எம்மா கொரோனெல் அச்­செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். 

 

'உலகின் மிகப் பயங்­க­ர­மான கிரி­மி­ன­லாக ஜோகுய்ன் கூஸ்­மனை மெக்­ஸிகோ அதி­கா­ரிகள் சித்­த­ரித்­துள்­ளனர். ஆனால், அதற்­காக அவர் அப்­படி பயங்­க­ர­மா­ன­வ­ராக மாறி­விட்டார் என்று அர்த்­த­மல்ல.

 

 

ஜோகுய்ன் கூஸ்மன்' உலகின் மிக செல்­வந்­த­ரான நபர்­களில் ஒரு­வ­ரல்ல. அவர் இரத்த வெறி பிடித்­தவர், பாலியல் வல்­லு­றவில் ஈடு­ப­டுவர் என்­றெல்லாம் எந்த அடிப்­ப­டையில் கூறு­கி­றார்கள் என்று தெரி­ய­வில்லை' என எம்மா கூறி­யுள்ளார்.

 

ஆனால், அவரின் போதைப்­பொருள் கடத்தல் குறித்து தனக்குத் தெரி­யாது என எம்மா கூறு­கிறார். தற்­போது 26 வய­தான எம்மா கொரோனெல் அய்­புரோ, அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்­தவர்.

 

முன்னாள் அழ­கு­ரா­ணி­யான அவர், 2006 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக எல் சபோ கூஸ்­மனை சந்­தித்தார். 2007 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

 

அப்போது எல்சபோ 50 வயதானவராகவும் எம்மா 18 வயதானவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.