Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் முன்னாள் அழகுராணி
2016-02-18 17:55:25

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அழகு ராணியொருவர் வாகன விபத்தொன்றில் சிக்கி, உயிருக்குப் போராடி வருகிறார். 

 

காரா மெக்கலம் எனும் இந்த யுவதி, நியூ ஜேர்ஸி அழகு ராணியாக 2013 ஆம் ஆண்டு தெரிவானார்.  24 வயதான அவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

இந் நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அவர் செலுத்திச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து  மரமொன்றில் மோதியது. 

 

அதன்பின் மேலும் இரு மரங்களின் மீது மோதி நின்றது. இதனால், காரா மெக்கலம் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இக் காரில் காரா மெக்கலம் தனியாகப் பயணம் செய்தார் எனவும் அவர் ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

 

கடந்த வருடம் பிரின்ஸ்டன் கல்லூரியில் அவர் பட்டதாரியானமை குறிப்பிடத்தக்கது. மதுபானம்  அல்லது போதைப்பொருள் எதுவும் இவ் விபத்துக்கு ஒரு காரணமாக இருப்பதாகத் தெரியவில்லை என நியூஜேர்ஸி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.