Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கல்லூரியிலிருந்து வெளியேறி 28 வருடங்களின்பின் பட்டம் பெற்றார் ஷாருக் கான்
2016-02-18 10:55:31

பொலிவூட் நட்சத்திரமான ஷாருக் கான், தனது பட்டப்படிப்புப் பரீட்சையில் சித்தியடைந்து 28 வருடங்களின்பின் நேற்று முன்தினம் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார். 

 

இந்தியாவின் முன்னிலை நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் டில்லியில் பிறந்தவர். டில்லியிலுள்ள ஹான்ஸ்ராஜ் கல்லூரியில் அவர் பொருளியல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை பயின்றார்.

 

1985 – 88 பிரிவு மாணவரான அவர், 1988 ஆம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்தார். ஆனால், பின்னர் நடிப்புத்துறையில் அவர் கவனம் செலுத்தியதால், தனது பட்டப்படிப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லையாம்.

 

இந் நிலையில், “ஃபேன்” எனும் தனது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்காக புது டில்லிக்குச் சென்ற ஷாருக் கான், தான் கல்வி பயின்ற ஹான்ஸ்ராஜ் கல்லூரிக்குச் சென்று தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார். 

 

50 வயதான ஷாருக் கான் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “எனக்கு இது மிக விசேடமான ஒரு தருணம். 1988 ஆம் ஆண்டு வெளியேறிச் சென்றபின் இன்று எனது கல்லூரிக்கு திரும்பி வந்துள்ளேன்.

 

 

இன்று எனது பிள்ளைகள் இங்கு இல்லாதிருப்பதை இழப்பாக உணர்கிறேன். எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் அவர்களுக்கு காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார். 

 

ஹான்ஸ்ராஜ் கல்லூரியின் அதிபர் ராமா சர்மா உரையாற்றுகையில், இக் கல்லூரி தனது சுப்பர்ஸ்டார் மாணவன் குறித்து மிகவும் பெருமை யடைவதாகத் தெரிவித்தார்.

 

“இவ்வளவு வருடங்களுக்குப் பின் அவருக்கு இப்பட்டத்தை வழங்குவதில் நாம் மிக மகிழ்ச்சியடைகிறோம். அவரின் பட்டதாரி சான்றிதழை நாம் கவனமாக பாதுகாத்து வந்தோம்.

 

அவருக்கு பட்டமளிப்பதில் நாம் மிகப் பெருமையடைகிறோம்” என அதிபர் ராமா சர்மா தெரிவித்தார். எவ்வித சினிமா பின்னணியுமின்றி பொலிவூட்டில் வாய்ப்பு தேடிய ஷாருக் கான் 1988 ஆம் ஆண்டு தில் தாரியா எனும் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார்.

 

அவர் நடித்த முதலாவது பொலிவூட் திரைப்படமான “தீவானா” 1992 ஆம் ஆண்டு வெளியாகியது. தற்போது இந்தியாவில் அதிக வருமானம் பெறும் ஒரு நடிகராக ஷாருக் கான் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.