Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
15 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பில் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜோன்ஸனுக்கு எதிராக வழக்கு; பாலியல் உறவை தான் இரகசியமாக வீடியோவில் பதிவு செய்ததாக நீதிமன்றில் சிறுமி சாட்சியம்
2016-02-17 15:01:18

இங்­கி­லாந்து கால்­பந்­தாட்ட நட்­சத்­தி­ர­மான அடம் ஜோன்ஸன், 15 வய­தான சிறு­மி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டாரென்ற குற்­றச்­சாட்டு தொடர்­பாக வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கி­றது.

 

28 வய­தான அடம் ஜோன்ஸன், 2010 முதல் 2012 வரை இங்­கி­லாந்து அணிக்­காக 12 போட்­டி­களில் விளை­யா­டி­யவர். மன்­செஸ்டர் சிற்றி, மிடில்பரோ, லீட்ஸ், வெட்போர்ட் போன்ற பிர­பல கால்­பந்­தாட்டக் கழ­கங்­களின் சார்­பிலும் அவர் விளை­யா­டி­யுள்ளார். 

 

அவர் பங்­கு­பற்­றிய மன்­செஸ்டர் சிற்றி அணி இங்­கி­லாந்து எவ்.ஏ. கிண்ணச் சுற்­றுப்­போட்டி, ப்றீமியர் லீக் போட்­டி­க­ளிலும் சம்­பி­ய­னா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 

புகழ்­பெற்ற கால்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ராக விளங்­கிய அடம் ஜோன்ஸன், கடந்த வருடம் 15 வய­தான சிறு­மி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டா­ரென குற்றம் சுமத்­தப்­பட்டார். 

 

 

தனது வாக­னத்தில் வைத்தே மேற்­படி சிறு­மி­யுடன் ஜோன்ஸன் பாலியல் உறவில் ஈடு­பட்­டா­ரெனக் கூறப்­பட்­டது. இங்­கி­லாந்து சட்­டப்­படி 16 வய­துக்கு குறைந்த பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது குற்­ற­மாகும்.

 

 

அதனால், கடந்த மார்ச் 2 ஆம் திகதி அடம் ஜோன்ஸன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். இது தொடர்­பான வழக்கு விசா­ரணை இங்­கி­லாந்தின் பிராட்போர்ட் கிறவுண் நீதி­மன்றில் நடை­பெ­று­கி­றது. நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற விசா­ர­ணையில் மேற்­படி சிறுமி நீதி­மன்றில் ஆஜ­ராகி சாட்­சி­ய­ம­ளித்தார்.

 

பாட­சாலை மாண­வி­யான அச்­சி­றுமி, அடம் ஜோன்­ஸ­னு­ட­னான பாலியல் உறவின் ஒரு பகு­தியை தான் இர­க­சி­ய­மாக வீடி­யோவில் பதி­வு­செய்­து­கொண்­ட­தா­கவும் நீதி­மன்றில் தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இறு­தி­யாக சண்­டர்லேண்ட் கழ­கத்­துக்காக விளை­யா­டிய அடம் ஜோன்­ஸனே தனது அபி­மான கால்­பந்­தாட்ட வீர­ராக விளங்­கி­னா­ரென நீதி­வா­னிடம் அச்­சி­றுமி கூறினார். 

 

'அடம் ஜோன்­ஸ­னி­ட­மி­ருந்து எனக்கு மெசேஜ் ஒன்று கிடைத்­தது. பல தடவைகள் மெசேஜ்­களை பரி­மாறிக் கொண்ட பின்னர், கடந்த வருடம் ஜன­வரி 17 ஆம் திகதி நாம் முதல் தட­வை­யாக சந்­தித்தோம். எனக்­காக, சண்­டர்லேண்ட் அணியின் இரு அங்­கி­களில் அவர் கையெ­ழுத்­திட்டார்' என அச்­சி­றுமி கூறினார்.

 

'பின்னர் நான் அவரை மீண்­டும் சந்­தித்தேன். நன்றி தெரி­விக்­கும் ­வ­கையில் அவ­ரு­க்கு நான் முத்­த­மிட்டேன். ஜோன்­ஸனின் ரேஞ்ச் ரோவர் வாக­னத்தில் இச்­சந்­திப்பு நடை­பெற்­றது. 

 

அதைத் தொட­ரு­மாறு ஜோன்ஸன் கூறினார். அதன்பின் நாம் பல தட­வைகள் முத்­த­மிட்டோம். பின்னர் அவர் எனது காற்சட்டைக்குள் கைகளை கொண்டு சென்றார்....' என ஆரம்பித்து அடம் ஜோன்ஸனுடனான பாலியல் உறவு குறித்து நீதிமன்றில் அந்த யுவதி விபரித்தார். 

 

இதன்போது, அடம் ஜோன்ஸனும் நீதிமன்றில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 28 வயதான அடம் ஜோன்ஸன், இப்பாலியல் குற்றச்சாட்டையடுத்து ப்றீமியர் லீக் கழகமான, சண்டர்லேன்ட் கழகத்திலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

 

 

அவருடன் விளம்பர ஒப்பந்தங்களை செய்திருந்த சில நிறுவனங்கள் மேற்படி ஒப்பந்தங்களை ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.