Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தனது லொறிகளுக்குள் ஒளிந்துகொள்ளும் அகதிகளுக்கு உலகின் முன்னாள் அதிக வலிமையான நபர் கடும் எச்சரிக்கை
2016-02-16 09:38:31

உலகின் முன்னாள் அதிக வலி­மை­யான நப­ரான மேரியஸ் புட்ஸி­ய­னோவ்ஸ்கி, தனது லொறி­க­ளுக்குள் ஒளிந்­து ­கொண்டு சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்குள் நுழைய முற்­படும் அக­திகள் தொடர்பில் கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். 

 

 

பேஸ்போல் மட்­டை­யொன்றின் புகைப்­ப­டத்தை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்ட, அவர், “எனது லொறி­க­ளுக்குள் ஒளிந்­தி­ருக்கும் நபர்­க­ளுக்கு இதுதான் காத்­தி­ருக்­கி­றது” எனக் குறிப்­பிட்டுள்ளார்.  

 

அவரின் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான வாக­னங்­களில் சிலர் ஒளிந்­து­கொண்டு பிரிட்­ட­னுக்குள் நுழை­வ­தற்கு (தெரி­யாத்­த­ன­மாக) அனு­ம­தித்­த­மைக்­காக அவரின் நிறு­வ­னத்­துக்கு பிரித்­தா­னிய அதி­கா­ரிகள் 40,000 ஸ்ரேலிங் பவுண் அப­ராதம் விதித்­தனர். 

 

இந்த அப­ரா­தமும், தனது லொறி­க­ளி­லுள்ள பொருட்­களை சிலர் சேத­மாக்­கி­ய­மையும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் மேரியஸ் புட்­ஸி­ய­னோவ்ஸ்­கிக்கு கடும் ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

 

39 வய­தான மேரியஸ் புட்­ஸி­ய­னோவ்ஸ்கி, போலந்தைச் சேர்ந்தவர். பளு­தூக்கும் வீரர் ஒரு­வரின் மக­னான புட்­ஸி­ய­னோவ்ஸ்­கியும் சிறு வயது முதல் விளை­யாட்­டுக்­களில் தீவிர ஆர்வம் கொண்­ட­வ­ராக வளர்ந்தார்.

 

11 வயதில் அவர் கராத்தே பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தார். 13 வயதில் உடற்­கட்டுப் பயிற்­சி­களில் ஈடு­பட ஆரம்­பித்தார்.

 

15 வயதில் குத்­துச்­சண்டைப் பயிற்­சி­யிலும் ஈடு­படத் தொடங்­கினார்.

 

16 வயதில் போலந்தின் பளு­தூக்­குதல் வல்­லவர் போட்­டி­களில் அவர் பங்­கு­பற்ற ஆரம்­பித்தார். 

 

1999 ஆம்­ ஆண்டில் வலிமை மிக்க நபர்­க­ளுக்­கான “ஸ்ட்ரோங்மேன்” போட்­டி­க­ளிலும் மேரியஸ் புட்­ஸி­ய­னோவ்ஸ்கி பங்­கு­பற்ற ஆரம்­பித்தார். 

 

அதன்பின் வலிமை மிக்க நபர்­க­ளுக்­கான உல­க­ளா­விய பல்­வேறு போட்­டி­களில் அவர் வெற்­றி­யீட்­டினார்.  

 

கலப்பு தற்­காப்புக்கலை மற்றும் றக்பி போட்­டி­க­ளிலும் அவர் பங்­கு­பற்­றி­யுள்ளார். 

 

6 அடி 1 அங்­குல உய­ரமும் 145 கிலோ­கிராம் எடையும் கொண்ட மேரியஸ் புட்­ஸி­ய­னோவ்ஸ்கி, வலிமை மிக்க நபர்­க­ளுக்­கான உலகளாவிய போட்­டி­களில் 5 தட­வைகள் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

உடற்­ப­லத்தில் மாத்­திரம் கவனம் செலுத்­து­ப­வ­ரல்லர் புட்­ஸி­ய­னோவ்ஸ்கி. சர்­வ­தேச உற­வுகள் துறையில் முதுமாணி பட்டம் பெற்­றவர் இவர்.

 

இசைத்­து­றை­யிலும் அவர் ஆர்வம் கொண்டவர். தனது சகோ­த­ரரின் இசைக்­கு­ழு­விலும் அவர் பாடல்­களை பாடி­யுள்ளார். 

 

2008 ஆம் ஆண்டு போலந்தில் 'புட்­ஸி­ய­னோவ்ஸ்கி ட்ரான்ஸ்போர்ட்' எனும் பெயரில் வாடகை லொறி நிறு­வ­ன­மொன்­றையும் அவர் ஸ்தாபித்தார். 

 

இந்த லொறி­க­ளுக்குள் பலர் ஒளிந்­து­கொண்டு சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்குள் நுழைந்­தமை புட்­ஸி­ய­னோவ்ஸ்­கிக்கு பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

 

8 பேரை இவ்­வாறு சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்குள் ஏற்­றி­வந்­த­மைக்­காக அவரின் நிறு­வ­னத்­துக்கு 40,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 83 இலட்சம் ரூபா) அப­ராதம் விதிக்­கப்­பட்­டமை அவ­ருக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 

 

இந் ­நி­லை­யி­லேயே சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பேஸ்போல் மட்டையுடன் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களுக்குள் ஒளிந்திருந்த சிலரின் புகைப்படங்களையும் லொறியிலுள்ள பொருட்கள் சேதமடைந்திருக்கும் காட்சிகள்அடங்கிய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.