Saturday  22 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
ஆணாக மாறிய அழகுராணி
2016-02-14 12:00:22

அமெரிக்காவைச் சேர்ந்த அழகுராணியொருவர், ஆணாக மாறியுள்ளார். பெண்கள் ஆணாக மாறுவதும் ஆண்கள் பெண்களாக மாறுவதும் மேற்குலக நாடுகளில் அவ்வளவு அரிதான விடயமல்ல. 

 

ஆனால், இவ்வாறு பால் மாற்றம் செய்பவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தாம் சார்ந்த பாலினத்தைவிட எதிர்பாலாரைப் போன்று நடையுடை பாவனைகளில் ஈடுபடுவதற்கே ஆர்வம் காட்டுவர். 

 

எனினும், அஷ்டன் கொல்பி எனும் இந்த யுவதி அழகுராணி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டும் அளவுக்கு பெண் தன்மையானவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

மிஸ் அமெரிக்கா அழகுராணியாக தெரிவாகக்கூடிய வாய்ப்பை புறக்கணித்துவிட்டு ஆணாக மாறியுள்ளார் 23 வயதான அஷ்டன் கொல்பி.

 

அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த அஷ்டன் கொல்பி, 17 வயதில் உள்ளூர் அழகுராணி போட்டியொன்றில் பங்குபற்றினார்.

 

 

அடுத்த இரு வருடங்களில் அவர் 7 அழகுராணி போட்டிகளில் பங்குபற்றி  பல வெற்றிகளைப் பெற்றார்.

 

மிஸ் டீன் கொலம்பஸ் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றார். மிஸ் ஒஹையோ அழகுராணி போட்டியிலும் அவர் பங்குபற்றினார். 

 

ஆனால், பின்னர் ஆணாக மாறுவதற்குத் தீர்மானித்து ஆண்களுக்கான டெஸ்டொஸ்டெரோன் ஹோர்மனை பயன்படுத்தத் தொடங்கினார்.

 

"இறுதியாக நான் மிஸ் ஒஹையோ அழகுராணி போட்டியில் பங்குபற்றினேன். அது மிஸ் அமெரிக்கா போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் அளித்திருக்கக்கூடும்.  

 

ஆனால் மிஸ் ஒஹையோ போட்டிக்காக நான் மேடையில் நின்றபோது, அசௌகரியமாக உணர்ந்தேன். அந்நிகழ்வில் பங்குபற்றுவது எனக்கு சிரமமாக இருந்தது.

 

அப்போட்டியின் பின்னர் நான் கண்ணீர் விட்டு அழுதேன். 2012 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நான் ஆணாக வாழத் தொடங்கினேன்" அஸ்டன் கொல்பி.

 

அழகான யுவதியாக வாழும் வாழ்க்கையை கைவிட்டு அவர் ஏன் ஆணாக மாற விரும்பினார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் அஸ்டனின் குடும்பத்தினரும் நண்பர்களும் வியப்படைந்தனராம்.

 

"அழகுராணி போட்டிகளில் நான் பெற்ற வெற்றிகள் எல்லாம் வீணாகிவிட்டன என்பதும் எனது தாயாரை கடுமையாக பாதித்தது.

 

பல மாதங்கள் அவர் என்னுடன் பேசவில்லை. ஆனால், எனது தந்தை ஆதரவாக இருந்தார்.

 

பின்னர் தாயும் சமாதானமானார்" எனக்கூறும் அஸ்டன் கொல்பி, மார்பகங்களையும் சத்திரசிகிச்சைகள் மூலம் அகற்றிக்கொண்டார்.

 

இச்சத்திரசிகிச்சைக்காகவும் ஹோமோன்களுக்காகவும் அவர் 10 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளார்.

 

தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் அஸ்டன் கொல்பிக்கு தற்போது ஒரு காதலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.