Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விராத் கோஹ்லி – அனுஷகா சர்மா காதல் முறிந்தது?
2016-02-11 15:08:31

இந்­திய கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர் விராத் கோஹ்­லிக்கும் பொலி­வூட்டின் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ரான அனுஷ்கா சர்­மா­வுக்கும் இடை­யி­லான காதல் முறிந்­து­விட்­ட­தாக கூறப்ப­டு­கி­றது.

 

27 வய­தான விராத் கோஹ்லி இந்­திய அணியின் முன்­னிலை துடுப்­பாட்ட வீர­ராக திகழ்­வ­துடன் இந்­திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலை­வ­ரா­கவும் விளங்­கு­கிறார். 

 

27 வய­தான நடிகை அனுஷ்கா சர்மா பொலி­வூட்டின் பல வெற்றிப் படங்­களில் கதா­நா­ய­கி­யாக நடித்­த­துடன் திரைப்­பட தயா­ரிப்­பா­ள­ரா­கவும் விளங்­கு­கிறார். 

 

இவ்­வி­ரு­வரும் சுமார் 3 வரு­டங்­க­ளாக காத­லித்து வந்­தனர். 2013 ஆம் ஆண்டு விளம்­பரப் படப்­பி­டிப்­பொன்றில் இணைந்து பங்­கு­பற்­றி­ய­போது இவர்­க­ளுக்­கி­டை­யி­லான காதல் மலர்ந்­த­தாக கூறப்­பட்­டது. 

 

தமது காதல் குறித்து இந்த ஜோடி வெளிப்­ப­டை­யாக பேசு­வதை ஆரம்­பத்தில் தவிர்த்த போதிலும் இவர்­களின் காதல் பகி­ரங்க இர­க­சி­ய­மா­கவே இருந்­தது. 

 

விராத் கோஹ்லி பங்­கு­பற்றும் கிரிக்கெட் போட்­டி­களை அரங்­கு­க­ளுக்கு நேர­டி­யாக சென்று பார்­வை­யிட்டு வந்த அனுஷ்கா சர்மா, பின்னர் இந்­தி­யா­விலும் வெளி­நா­டு­க­ளிலும் நடை­பெற்ற பல வைப­வங்­களில் கோஹ்­லி­யுடன் இணைந்து பங்­கு­பற்ற ஆரம்­பித்தார். 

 

கோடிக்­க­ணக்­கான விளை­யாட்டு மற்றும் சினிமா ரசி­கர்­களைக் கவர்ந்த இந்த ஜோடி பல்­வேறு தரப்­பி­ன­ராலும் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டு வந்­தது. இவர்கள் விரைவில் திரு­மணம் செய்­து­கொள்வர் எனவும் பலர் எதிர்­பார்த்­தனர். 

 

ஆனால், கோஹ்­லியும் அனுஷ்கா சர்­மாவும் தற்­போது பிரிந்­து­விட்­டனர் என்ற  தகவல் இவர்­களின் ரசி­கர்கள் பலரை அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது. 

 

தாம் இரு­வரும் பிரிந்­து­விட்­ட­தாக கோஹ்­லியோ, அனுஷ்­காவோ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. ஆனால், இவர்­களின் உறவு முறி­வடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்தும் பல விட­யங்­களை பலர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

 

இன்ஸ்­ட­கிரம் சமூக வலைத்­த­ளத்தில் தமது புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வதில் இரு­வரும் ஆர்வம் காட்­டு­ப­வர்கள். அண்­மையில் இரு­வரும் பரஸ்­பரம் மற்­ற­வரின் இன்ஸ்­ட­கிரம் பக்­கத்­தி­லி­ருந்து அன்ஃ­பலோ செய்து கொண்­டனர். 

 

'ஹார்ட் புரொக்கன்' என குறிப்­பெ­ழு­தப்­பட்ட தனது புகைப்­ப­ட­மொன்றை இன்ஸ்­ட­கிராம் பக்­கத்தில் தர­வேற்­றிய கோஹ்லி பின்னர் அப்­ ப­டத்தை அழித்­தி­ருந்தார்.  

 

இப்­போது அப்­ ப­டத்தை அவர் மீண்டும் வெளி­யிட்­டுள்ளார். அதே­வேளை, நடிகர் அன்காத் பேடி நடத்­திய விருந்து நிகழ்வில் கலந்­து­கொண்ட விராத் கோஹ்லி, 'ஐ யேம் சிங்கிள், லெட்ஸ் டான்ஸ்' எனக்  கூறி குத்­தாட்டம் போட்­டாராம். 

 

அனுஷ்கா சர்­மாவை காத­லித்து வந்­த­வ­ராக அறி­யப்­பட்ட விராத் கோஹ்லி. தான் 'சிங்கிள்' என பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யமை அவரின் காதல் முறிந்­து­விட்­டதை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே பலரும் கரு­து­கின்­றனர். 

 

இக் ­காதல் முறி­வுக்கு என்ன காரணம் என்­பது தொடர்பில் பொலிவூட் மற்றும் கிரிக்கெட் வட்­டா­ரங்­களில் பல்­வேறு தக­வல்கள் அடி­ப­டு­கின்­றன. 

 

இரு­வரும் தமது தொழில்சார் வாழ்க்­கையில் தீவிர கவனம் செலுத்­து­வதற்­காக பிரிந்­துள்­ளனர் என்­கின்­றனர் சிலர். 

 

உட­ன­டி­யாக திரு­மணம் செய்­து ­கொள்­வ­தற்கு அனுஷ்கா சர்மா தயார் நிலையில் இல்லை எனக் கூறப்­ப­டு­கி­றது. விராத் கோஹ்லி பஞ்­சாபி இனத்தைச் சேர்ந்­தவர். திரு­மணம் செய்­து­கொள்­ள­வுள்ள பஞ்­சாபி ஆண்கள் தாடி வளர்த்துக் கொள்வது பாரம்பரியமாகும்.

 

 

திருமண வைபவத்தின்போது பஞ்சாபி மணமகன்கள் தாடியுடனேயே தோன்றுவது வழக்கம். ஆனால், விராத் கோஹ்லி தாடியை மழித்துவிட்டார்.  

 

திருமணம் செய்துகொள்வதற்கான விராத் கோஹ்லியின் முன்மொழிவை அனுஷ்கா சர்மா நிராகரித்து விட்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.