Thursday  27 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
ஸ்டீவ் வோ பெரும் சுயநலவாதியான அணித்தலைவர் - முன்னாள் ஆஸி அணி வீரர் ஷேன் வோர்ன் குற்றம் சுமத்துகிறார்
2016-02-10 14:45:14

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் வோ, மிக சுயநலவாதி என அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் விமர்சித்துள்ளார். 

 

 

ஸ்டீவ் வோவும் ஷேன் வோர்னும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிகளுக்கு பெரும் பங்காற்றியவர்கள்.

 

அவுஸ்திரேலியாவுக்கு உலக கிண்ணத்தையும் வென்றுகொடுத்த அணியிலும் இணைந்து விளையாடியவர்கள் இவர்கள். ஸ்டீவ் வோ அணித்தலைவராக இருந்தவேளையில் ஷேன் வோர்ன் உப தலைவராக இருந்தார்.

 

 

அப்போதெல்லாம் மைதானத்தில் ஸ்டீவ் வோவும் ஷேன் வோர்னும் நெருக்கமானவர்கள் போன்றே காணப்பட்டனர்.

 

ஆனால், தற்போது தனது முன்னாள் அணித்தலைவரான ஸ்டீவ் வோவை (50) கடுமையாக விமர்சித்துள்ளார் சுழற்பந்துவீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்ன். 

 

தற்போது, 46 வயதான ஷேன் வோர்ன் அவுஸ்திரேலிய செனல் 10 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் 'ஐ ஏம் ஏ செலிபிரிட்டி, கெட் மீ அவ்ட் ஒவ் ஹியர்' எனும் நிகழ்ச்சியில் பங்குபற்றுகிறார்.

 

இந் நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்டீவ் வோவை ஷேன் வோர்ன் விமர்சித்துள்ளார். 

 

'எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் விளையாடிய அணிகளின் தலைவர்களில் மிகவும் சுயநலம் மிகுந்த அணித்தலைவர் ஸ்டீவ் வோ' என வோர்ன் சாடியுள்ளார்.  

 

1999 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அவுஸ்திரேலிய குழாமிலிருந்து தான் இடையில் வெளியேறியமைக்கும் ஸ்டீவ் வோவுடனான மோதலே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அச் சுற்றுலாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் ஷேன் வோர்ன் வெறும் 2 விக்கெட்களையே வீழ்த்தியிருந்தார்.

 

சராசரியாக 134 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தினார். ஆனால், மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில் 31.43 எனும் சராசரியில் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 

 

3 போட்டிகள் முடிவில் மேற்கிந்திய அணி 2–1 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. 4 ஆவது போட்டியில் ஷேன் வோர்னுக்குப் பதிலாக கொலின் மில்லர் சேர்க்கப்பட்டார்.

 

அப் போட்டியில் 176 ஓட்டங்களால் வென்ற அவுஸ்திரேலியா, 'பிராங் வொரல் கிண்ணத்தை' தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 

அத் தொடரில் ஷேன் வோர்னுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் மறக்கவில்லை. அதேவேளை, ஸ்டீவ் வோவை தான் வெறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்கிறார் ஷேன் வோர்ன்.

 

 

'டெஸ்ட் போட்டியிலிருந்து நான் நீக்கப்பட்டமை எனக்கு உண்மையில் சினமேற்படுத்தியது. 1999 ஆம் ஆண்டு (மேற்கிந்தியத் தீவில்) கடைசி போட்டியில் நாம் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம்.

 

அந்த கட்டத்தில் அணித்தலைவர் (ஸ்டீவ் வோ) உபதலைவர் (வோர்ன்), பயிற்றுநர் (ஜொவ் மார்ஷ்) ஆகியோரே அணி வீரர்களை தெரிவுசெய்து வந்தனர்.

 

 

நான் சிறப்பாக பந்து வீசவில்லை. நாம் தோல்வியுற்றோம். பிறையன் லாரா அசாதாரணமான வகையில் துடுப்பெடுத்தாடினார். ஆனால், நான் பலிகடா ஆக்கப்பட்டதாகவே உணர்கிறேன். 

 

'அணித்தெரிவு மேசையில் நாம் அமர்ந்தோம். அப்போது 'நீங்கள் சிறப்பாக விளையாடவில்லை என ஸ்டீவ் வோ கூறினார். அணி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என நான் கேட்டேன்.

 

 

அவர் நானே இவ்வணியின் தலைவர். நீங்கள் சிறப்பாக விளையாடவில்லை' என ஸ்டீவோ கூறினார். சுமார் 10 வருட காலம் நான் விளையாடியிருந்த நிலையில் இது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. சிறிது காலத்துக்கு முன்னர்தான் நான் தோளில் சத்திரசிகிச்சை செய்துகொண்டிருந்தேன்.

 

அப் போட்டியில் நாம் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். வேறு பல காரணங்களுக்காகவும் நான் ஸ்டீவ் வோவை விரும்பவில்லை” என ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.