Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதையில் வாகனம் செலுத்தியதால் அழகுராணி பட்டத்தை இழந்த யுவதி - காதலரை கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு
2016-02-09 16:00:40

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த முன்னாள் அழகு­ ராணி ஒருவர் தனது காத­லரை கத்­தியால் குத்­தி­னா­ரென குற்றஞ் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

 

இவர் போதையில் வாகனம் செலுத்­தி­யமை தொடர்­பான சர்ச்சை கார­ண­மாக அழ­கு­ராணி பட்டத்தை துறந்­தவர் என்பது குறிப்­பிடத்­தக்­கது.

 

ஸ்டோர்மி கெஃபெலர் எனும் இந்த யுவதி மிஸ் வோஷிங்டன் யூ.எஸ்.ஏ. 2016 அழ­கு­ரா­ணி­யாக கடந்த ஒக்­டோபர் மாதம் தெரி­வு­செய்­யப்­பட்­டவர்.

 

இவ்­ வ­ருடம் மிஸ் யூ.எஸ்.ஏ. அழ­கு­ராணி போட்­டி­யிலும் வோஷிங்டன் மாநி­லத்தின் சார்பில் அவர் பங்­கு­பற்­ற­வி­ருந்தார். 

 

அமெ­ரிக்கப் பாணி கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளிலும் ஸ்டோர்மி கெஃபெலர் பங்­கு­பற்றி வந்­தவர்.

 

கால்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக விளங்­கிய நிலையில், அழ­கு­ராணி போட்­டி­யிலும் முடி­சூ­டிய முத­லா­வது அமெ­ரிக்க யுவதி ஸ்டோர்மி கெஃபெலர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இதனால் பல்­துறை ஆற்றல் மிக்க யுவ­தி­யாக அவர் பல­ராலும் பாராட்­டப்­பட்­டி­ருந்தார். 

 

ஆனால், மிஸ் வோஷிங்டன் யூ.எஸ்.ஏ. அழ­கு­ராணி போட்டி நடை­பெ­று­வ­தற்கு 6 மாதங்­க­ளுக்கு முன்னர், மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­யமை தொடர்பில் ஸ்டோர்மி கெஃபெலர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டி­ருந்தார் என்ற தகவல் பரவத் தொடங்­கி­யது.

 

இந்த அழ­கு­ராணி போட்டி விதி­க­ளின்­படி, போட்­டி­யாளர்கள் எவ்­வித சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். 

 

ஆனால், தான் மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டதை ஸ்டோர்மி கெஃபெலர் மறைத்­ததால் அவர் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு தகு­தி­யற்­றவர் என விமர்­ச­னங்கள் எழுந்தன.

 

இதனால் அவரின் அழ­கு­ராணி பட்­டத்தை பறிக்க வேண்டும் என பலர் வலி­யு­றுத்­தினர். இது தொடர்­பான சர்ச்­சைக்கு மத்­தியில் அழ­கு­ராணி பட்­டத்தை துறப்­ப­தாக ஸ்டோர்மி கெஃபெலர் அண்­மையில் அறி­வித்தார்.

 

அவர் மது­போ­தையில் வாகனம் செலுத்­திய விடயம் கடந்த ஜன­வரி மாதம் வரை தமக்குத் தெரி­யா­தென அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்கள் கூறினர். 

 

காதலர் மீது கத்­திக்­குத்து

 

இதற்­கி­டையில் தனது காத­லரை கத்­தியால் குத்­தினார் என மற்­றொரு பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டும் ஸ்டோர்மி கெஃபெலர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

 

ஸ்டோர்மி கெஃபெ­லரின் காதலர், மார்க்கோ பெப்பா எனும் கால்­பந்­தாட்ட வீரர். சியாட்டில் சோண்டர்ஸ் எனும் கால்­பந்­தாட்ட கழ­கத்தின் நட்­சத்­திரம் அவர். 

 

28 வய­தான மார்க்கோ பெப்­பாவும் 23 வயதான ஸ்டோர்மி கெஃபெ­லரும் வோஷிங்டன் மாநி­லத்­தி­லுள்ள சியாட்டில் நக­ரி­லுள்ள பெப்­பாவின் வீட்டில் வசித்து வந்­தனர்.

 

இந் ­நி­லையில் கடந்த டிசெம்பர் 17 ஆம் திகதி பெப்­பாவை ஸ்டோர்மி கெஃபெல் கத்­தியால் குத்­தினார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். 

 

மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­ற­வுடன், 'எனது காத­லரின் வீட்டில் விபத்­தொன்று ஏற்­பட்­டுள்­ளது' என அவ­சர சேவைப் பிரி­வி­ன­ருக்கு ஸ்டோர்மி கெஃபெலர் தகவல் தெரி­வித்தார்.

 

அவ்­ வீட்­டுக்கு விரைந்த மீட்புக் குழு­வினர் கத்­திக்­குத்து காயத்­துடன் மார்க்கோ பெப்­பாவை மீட்டு, அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.

 

ஆனால், அவ்­ வீட்டில் என்ன நடந்­தது என்­பது தொடர்பில் மார்க்கோ பெப்பாவும் ஸ்டோர்மி கெஃபெ­லரும் முரண்­பா­டான தக­வல்­க­ளையே தெரி­வித்­த­தாக அதி­கா­ரிகள் கூறினர். 

 

தனக்கு ஏற்­பட்ட காயத்­துடன் ஸ்டோர்மி கெஃபெ­ல­ருக்கு தொடர்­பில்லை என பெப்பா கூறி­னாராம்.

 

 

அதே­வேளை பெப்­பா­வுக்கு எவ்­வாறு காயம் ஏற்­பட்­டது என தனக்குத் தெரியவில்லை என ஸ்டோர்மி கூறினார். 

 

எனினும், வாக்குவாதத்தை அடுத்து, பெப்பாவை ஸ்டோர்மி கெஃபெலர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் கருதுகின்றனர்.

 

இச் சம்பவம் தொடர்பாக ஸ்டோர்மி கெஃபெலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.