Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
54 வயதில் மீண்டும் குத்துச்சண்டையில் ஈடுபட விரும்புவதாக முன்னாள் அதி பார உலக சம்பியன் பிராங் புரூனோ கூறுகிறார்: “வேண்டாம், இறந்துவிடுவீர்கள்” என்கிறார்கள் நண்பர்கள்
2016-02-03 10:54:53

முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனான பிராங் புரூனோ, 54 வயதில் மீண்டும் தொழில்சார் குத்துச்சண்டையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

எனினும், போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என பிரித்தானிய குத்துச்சண்டை கட்டுப்பாட்டுச் சபை (பீ.பீ.பீ.சி) தெரிவித்துள்ளது. 

 

பிரித்தானியரான பிராங் புரூனோ இறுதியாக சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே தொழில்சார் குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

1961 ஆம் ஆண்டு பிறந்த பிராங் புரூனோ குத்துச்சண்டை அரங்கில் பெரும் புகழுடன் விளங்கிய ஒரு வீரர். 6 அடி 3 அங்குல உயரமான அவர், சுமார் 14 வருட காலம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றினார்.

 

முன்னாள் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன்களான மைக் டைசன், லெனொக்ஸ் லூயிஸ் போன்ற வீரர்களுடன் உலக சம்பியன் பட்டங்களுக்காக அவர் மோதியுள்ளார்.

 

1995 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் ஒலிவர் மெக்கெல்லை தோற்கடித்து உலக குத்துச்சண்டைக் கவுன்ஸிலின் (டபிள்யூ.பீ.சி.) உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார்.

 

 

ஐரோப்பிய குத்துச்சண்டை ஒன்றியத்தின் அதி பார சம்பியன் பட்டத்தையும் வென்றவர் அவர்.

 

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற, மைக் டைசனுடனான போட்டியில் நொக்அவுட் முறையில் தோல்வியுற்ற பின்னர் தொழில்சார் குத்துச்சண்டைப் போட்டிகளிலிருந்து புரூனோ ஓய்வு பெற்றிருந்தார்.

 

உளவியல் நோயொன்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தவர் பிராங் புரூனோ. ஆனால், நேற்று முன்தினம் பிரிட்டனின் ஐ.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தான் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற விரும்புவதாகத் தெரிவித்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

 

“நான் பிறேக் டான்ஸ் ஆடுகிறேன். என்னிடம் அதிகமான சக்தி உள்ளது. நான் ஒரு சுப்பர் மேனைப் போன்று உணர்கிறேன்.

 

எல்லா நேரத்திலும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுகிறேன். 

 

அதனால்தான் நான் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற விரும்புகிறேன்” என பிராங் புரூனோ கூறினார்.

 

இந்த வயதில் மீண்டும் களமிறங்குவது நல்லதொரு தீர்மானமா என பிராங் புரூனோவிடம் அவரை செவ்வி கண்டவர் கேட்டபோது, “குத்துச்சண்டை ஊக்குவிப்பாளர்கள் எனக் கூறப்படுபவர்கள், தமது வீரர்கள் என்னை இரண்டு சுற்றுக்களில் தோற்கடித்து விடுவார்கள் எனக் கூறுவதை என்னால் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க முடியாது. 

 

நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. அதனால் அவர்களை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என பிராங் புரூனோ பதிலளித்தார்.

 

தொழில்சார் குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

ஆனால், பிராங் புரூனோ இந்த அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பித்தாலும் அவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என பிரித்தானிய குத்துச்சண்டை கட்டுப்பாட்டுச் சபை (பீ.பீ.பீ.சி.) தெரிவித்துள்ளது.

 

அவர் தற்போதும் வேறு குத்துச்சண்டை நிர்வாக அமைப்புகளின் அனுமதிப்பத்திரத்தைப் பெற்று போட்டிகளில் பங்குபற்ற முடியும். எனினும், அவர் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இதேவேளை, மீண்டும் குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்ற வேண்டாம், அப்படி பங்குபற்றினால் இறந்துவிடுவீர்கள் என பிராங் புருனோவை அவரின் நண்பர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.