Friday  28 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
மெஸியின் கடவுச்சீட்டு படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை; ஆப்கான் சிறுவனை சந்திக்க மெஸி ஆர்வம்
2016-02-02 10:33:11

ஆர்­ஜென்­டீன கால்­பந்­தாட்ட அணித் ­த­லை­வ­ரான லயனல் மெஸியின் கட­வுச்­சீட்டு புகைப்­ப­டத்தை இணையத்­தளத்தில் வெளி­யிட்ட துபாய் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ருக்கு ஒரு மாத கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 

ஸ்பெய்னின் பார்­ஸி­லோனா கழ­கத்­துக்­கா­கவும் விளை­யாடும் லயனல் மெஸி கடந்த வருடம் குளோபல் சொக்கர் அவார்ட்ஸ் விருதை வென்றார். 

 

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி இவ்­ வி­ருது வழங்கல் விழா நடை­பெற்­றது.

 

இதற்­காக லயனல் மெஸி துபாய்க்குச் சென்­ற­போது, அவரின் கட­வுச்­சீட்டை துபாய் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் படம்­பி­டித்­துக்­கொண்டார்.

 

பின்னர் அப்­ ப­டத்தை சமூக வலை­த்­தளங்­களில் வெளி­யிட்­டதால் மேற்­படி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் நெருக்­க­டிக்­குள்­ளானார்.

 

26 வய­தான மேற்­படி பொலிஸ் சார்ஜன்ட், துபாய் விமான நிலை­யத்தில் பணி­யாற்­றி­யவர்.

 

மெஸியின் கட­வுச்­சீட்டைப் படம்­பி­டித்து தான் இணை­யத்தில் வெளி­யிட்­ட­தாக அவர் ஒப்­புக்­கொண்டார்.

 

லயனல் மெஸி­யுடன் செல்பீ படம்­ பி­டித்­துக் ­கொள்­வ­தற்குத் தான் விரும்­பி­ய­தா­கவும் அதற்­கான வாய்ப்பு கிடைக்­க­வில்லை எனவும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் இந்த பொலிஸ் சார்ஜன்ட் தெரி­வித்­துள்ளார்.

 

துபாய் விமான நிலை­யத்தில் 2 ஆம் இலக்க டேர்­மி­னலில் கட­மை­யாற்­றிக்­ கொண்­டி­ருந்த அவர், தனது அபி­மான வீரர் லயனல் மெஸி அவ்­வி­மான நிலை­யத்­துக்கு வந்­த­தாக அறிந்­த­வுடன் அவரைக் காண்­ப­தற்­காக சுக­யீன விடு­முறை விண்­ணப்­பத்தை சமர்ப்­பித்தார். 

 

ஆனால், மெஸி­யுடன் செல்பீ எடுத்­துக்­கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க வில்லை.

 

லயனல் மெஸி களைப்­புடன் இருப்­ப­தாக அவரின் மெய்ப்­பா­து­காவ­லர்கள் அப்­போது தெரி­வித்­தனர்.

 

 

அதன்பின் கட­வுச்­சீட்டுச் சோதனை பகு­திக்­கூ­டாக தான் சென்­ற­போது, லயனல் மெஸியின் கட­வுச்­சீட்டு அங்கு இருப்­பதை அவதா­னித்த­தா­கவும் அதை தான் படம்­பி­டித்­துக்­ கொண்­ட­தா­கவும் மேற்­படி பொலிஸ் சார்ஜன்ட் தெரி­வித்­துள்ளார். 

 

இப்­ பு­கைப்­ப­டங்­களை சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டதால் மெஸியின் அந்­த­ரங்­கத்­துக்கு பங்கம் விளை­வித்­த­தாக மேற்­படி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

 

இது தொடர்­பாக துபாய் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையில் தன் மீதான குற்­றச்­சாட்டை அப்­ பொலிஸ் சார்ஜன்ட் ஒப்­பு­க்கொண்டார்.

 

அதை­ய­டுத்து அவ­ருக்கு ஒரு மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

 

இத்­ தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­முறை­யீடு செய்­யப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

 

28 வய­தான லயனல் மெஸி, கடந்த வரு­டத்­துக்­கான உலகின் சிறந்த கால்­பந்­தாட்ட வீர­ருக்­கான ஃபீஃபா பெலன் டி ஓர் விரு­தையும் வென்றார்.

 

இவ் ­வி­ருதை அவர் வென்­றமை இது 5 ஆவது தட­வை­யாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

பொலித்தீன் சீருடை­ய­ணிந்த ஆப்கான் சிறு­வனை சந்­திக்க­லயனல் மெஸி ஆர்வம்

 

இதே­வேளை, ஆர்­ஜென்­டீன தேசிய கால்­பந்­தாட்ட அணியின் சீருடை நிற­த்தைக் கொண்ட பொலித்தீன் பை (ஷொப்பிங் பேக்) ஒன்றை ஜேர்ஸி போன்று அணிந்­தி­ருந்த ஆப்­கா­னிஸ்தான் சிறுவ­னொ­ரு­வனை சந்­திப்­ப­தற்கு மெஸி விருப்பம் தெரி­வித்­துள்ளார். 

 

5 வய­தான முர்­தாஸா அஹ்­மெதி எனும் இச் ­சி­று­வ­னுக்கு அவனின் மூத்த சகோ­த­ர­னான ஹொமாயுன் எனும் 15 வயது சிறுவன் மேற்­படி “அங்­கியை” அணி­வித்­தி­ருந்தான்.

 

இதன்­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் கடந்த மாத மத்­தியில் வேக­மாக பர­வி­யது.

 

ஆப்­கா­னிஸ்­தானின் வன்­முறை மிகுந்­திருந்த கஸ்­னி மாகா­ணத்­தி­லுள்ள வறிய குடும்­பத்தைச் சேர்ந்த முர்­தஸா அஹ்­மெ­தியின் புகைப்­படம் பல­ரையும் நெகிழ வைத்­தது.

 

இந் ­நி­லையில் மேற்­படி சிறு­வனை சந்­திப்­ப­தற்கு லயனல் மெஸி விரும்­பு­கிறார் என ஆப்­கா­னிஸ்தான் கால்­பந்­தாட்டச் சம்மேளனம் நேற்று தெரி­வித்­துள்­ளது.

 

 

“இச் ­சி­று­வனை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­வது குறித்து இச் ­சம்­மே­ள­னத்­துடன் லயனல் மெஸி தொடர்பு கொண்டுள்ளார்” என ஆப்கானிஸ்தான் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பேச்சாளரான சயீட் அலி கஸேமி தெரிவித்துள்ளார். 

 

''ஆப்கானிஸ்தானுக்கு மெஸி வருவாரா அல்லது அவரைச் சந்திப்பதற்காக மேற்படி 5 வயது சிறுவனை ஸ்பெய்னுக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு அழைத்துச் செல்வதா என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம்” என சயீட் அலி கஸேமி கூறியுள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.