Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உலகம் தட்டையானது எனக் கூறும் நட்சத்திரங்கள்
2016-01-28 10:53:42

ஆதி கால மக்கள் உலகம் தட்டையானது என நம்பிக்கொண்டிருந்தனர்.

 

இல்லை, பின்னர் உலகம் கோள வடிவமானது எனக் கூறியவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 

ஆனால், உலகம் கோள வடிவமானது என நிரூபிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாகி விட்டன. 

 

எனினும், உலகம் தட்டையா னதுதான் எனக் கூறுபவர்கள் இன்னும் உள்ளனர். பல பிரபலங்கள் சிலரும் இவர்களில் அடங்குகின்றனர். 

 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான டிலா டெக்குய்லா, உலகம் தட்டையானது எனத் தெரிவித்துள்ளார். 

 

31 வயதான டிலா டெக்குய்லா, வியட்நாமிய பெற்றோரின் மகளாக சிங்கப்பூரில் பிறந்தவர்.

 

இவரின் உண்மையான பெயர் தியென் தான்ஹ் தீ என்குயென் என்பதாகும். 

 

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இவர், மொடல், பாடகி, நடிகை எனப் பல முகங்களைக் கொண்டவர். 

 

அண்மையில் உலகம் தட்டையானது என இவர் டுவிட்டரில் தெரிவித்தார்.

 

அதையடுத்து ஏராளமானோர் டிலா டெக்குய்லாவை கிண்டலடித்தனர்.

 

ஆனால், டிலா டெயக்குய்லாவுக்கு ஆதரவாக பிரபல ராப் பாடகர் ஒருவரும் இப்போது களத்தில் குதித்துள்ளார்.

 

B.o.B  எனும் இப் பாடகரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 27 வயதான இவரின் உண்மையான பெயர், பொபி றே சிமன்ஸ் ஜூனியர் ஆகும்.

 

B.o.B  எனும் பெயரில் பிரபலமான இவர், உலகம் தட்டையானது எனக் கூறுவதுடன் இதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

உலகம் தட்டையானது என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், டுவிட்டரில் ஏராளமான படங்களை வெளியிட்டு எல்லாமே தட்டையாகத் தானே உள்ளது, உலகம் உருண்டை வடிவமானால், வளைவு எங்கேயிருக்கிறது காட்டுங்கள் என்கிறார் பாடகர் B.o.B .

 

ஆனால், பாடகர் B.o.B  கூறும் தட்டை உலகத் தத்துவம் பிழையானது என விண்வெளியில் நிபுணரான நீல் டிகிறேஸ் டைசன் போன்றோர் சுட்டிக்காட்டி பாடகர் B.o.B  இற்கு பதிலளித்துள்ளனர்.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.