Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
“ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஓர் ஊழலின் படம்” - அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றச்சாட்டு!
2016-01-27 10:50:16

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஊழலில் ஈடுபடுபவர் என அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 

 

 

2014 ஆம் ஆண்டில் யுக்ரைனின் கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பின்னர், ரஷ்யர்கள் பலருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தடைகளை விதித்தது.

 

ஆனால், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் ஊழலில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்னர் குற்றம் சுமத்தியிருக்கவில்லை. 

 

எனினும், அமெரிக்கத் திறைசேரியின் பயங்கரவாத மற்றும் நிதிப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவிச் செயலாளரான அடம் சூபின், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஊழலில் ஈடுபடுபவர் என விமர்சித்துள்ளார். 

 

பிபிசி தெலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றிலேயே, ஜனாதிபதி புட்டினை ஊழல் பேர்வழி என அடம் சூபின் விமர்சித்தார்.

 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த செவ்வி ஒளிபரப்பாகியது.

 

ஜனாதிபதி புட்டின் ஓர் “ஊழலின் படம்” என சூபின்  வர்ணித்தார்.

 

“அவர் தனது நெருங்கிய நண்பர்களையும் சகாக்களையும் செல்வந்தர்களாக்கியுள்ளார்.

 

அரச சொத்துக்களை பயன்படுத்துவதில் நண்பர்களல்ல எனத் தான் கருதுபவர்களை அவர் ஒதுக்குகிறார்.

 

ரஷ்யாவின் எண்ணெய் வளமாகட்டும், அரச ஒப்பந்தங்களை வழங்குவதிலாகட்டும், தனக்கு ஆதரவானவர்களை அவர் வழிநடத்துகிறார்.

 

ஏனையவர்களை ஒதுக்குகிறார். என்னைப் பொறுத்தவரை இது ஓர் ஊழலின் படம். அமெரிக்க அரசுக்கு இது பல வருட காலமாகத் தெரியும்” என அடம் சூபின் கூறினார். 

 

2007 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட சி.ஐ.ஏ. அறிக்கையொன்றில் விளாடிமிர் புட்டினின் சொத்து மதிப்பு சுமார் 400 கோடி டொலர் (சுமார் 56 ஆயிரத்து 400 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டிருந்ததாக இந் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

 

“அவர் ஒரு வருடத்துக்கு சுமார் 110,000 டொலர்களை (சுமார் ஒருகோடியே 55 இலட்சம் ரூபா) சம்பளமாகப் பெறுகிறார். ஆனால், அது அவரின் சொத்துக்கள் தொடர்பான துல்லியமான அறிக்கை அல்ல.

 

தனது உண்மையான சொத்துக்களின் பெறுமதியை மறைப்பதில் அவர் நீண்டகால பயிற்சியைக் கொண்டுள்ளதுடன் அதை அமுல்படுத்தி வருகிறார்” என அடம் சூபின் தெரிவித்தார். 

 

ரஷ்யாவின் அரச கப்பல்துறை நிறுவனமான ''சோவ்கொம்புளட்'' நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய திமித்ரி ஸ்கார்கா என்பவரின் செவ்வியும் மேற்படி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. 

 

இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான செல்ஷியின் உரிமையாளரான ரொமான் அப்ரமோவிக்கிற்கு சொந்தமான 3.5 கோடி டொலர் பெறுமதியான படகு ஒன்றை புட்டினுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையை தான் கையாண்டதாக திமித்ரி ஸ்கார்கா கூறினார்.

 

 

ரஷ்ய அரசாங்கம் மறுப்பு

ஆனால், மேற்படி நிகழ்ச்சியில் ஜனாதிபதி விளாடிமர் புட்டின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசங்கம் மறுத்துள்ளது.

 

ஜனாதிபதி புட்டினின் பேச்சாளரான திமித்ரி பெஸ்கோவ் இது தொடர்பாக கூறுகையில், புட்டின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

இக் குற்றச்சாட்டின் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படுமா என கேட்கப்பட்டபோது, தற்போது இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவு சிறந்த நிலையில் இல்லை, எனவே அதை இத்தகைய பொய்கள் மேலும் மோசமாக்குவது கடினம்” என திமித்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.