Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வீதியில் டெக்ஸி சாரதியை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட டாக்டர் இடைநிறுத்தம்
2016-01-25 10:22:14

அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

 

 

புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

 

இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார்.

 

ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார்.

 

இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸி சாரதியை அடித்தும் காலால் எட்டி உதைத்தும் மோதலில் ஈடுபட்டு ள்ளார்.

 

அத்துடன் டாக்டர் அஞ்சலியின் ஆத்திரம் அடங்கவில்லை. அந்த டெக்ஸியில் அமர்ந்துகொண்ட அஞ்சலி, அதன் உள்ளிருந்த பணம், பத்திரங்கள், சாரதியின் தொலைபேசி ஆகியவற்றை வீதியில் வீசி எறிந்துள்ளார்.

 

பின்னர் மியாமி நகர பொலிஸார் அங்கு வந்து டாக்டர் அஞ்சலியை அழைத்துச் சென்றனர்.

 

இதன்போது  பதிவுசெய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

மேற்படி பெண், டாக்டர் அஞ்சலி ராம்கிசூன் என இனங்காணப்பட்டார். 30 வயதான இவர், புளோரிடா மாநிலத்திலுள்ள ஜெக்ஸன் ஹெல்த் சிஸ்டம் எனும் நிறுவனத்தின் வைத்தியசாலையில் பணியாற்றுபவர்  என்பதும் தெரியவந்தது.

 

இதையடுத்து டாக்டர் அஞ்சலியை இடைநீக்கம் செய்துள்ள ஜேக்ஸன் ஹெல்த் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாகம், அவர் மீது உள்ளக விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

விசாரணைகளின் பெறுபேறு அடிப்படையில் அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

மேற்படி டெக்ஸியின் சாரதி பொலிஸாரை அழைப்பதற்காக தொலைபேசியை எடுத்தபோது, டாக்டர் அஞ்சலி ராம்கிசூன், ஆத்திரமடைந்து காரின் சாவியை பறித்துக்கொண்டு அப்பால் சென்றார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

அஞ்சலியின் தாக்குதலால் தனக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தொலைபேசியில் சாரதி கூறிபோது, அதை மறுதலிக்கும் விதமாக அஞ்சலி பேசிக்கொண்டிருந்தாராம்.

 

'நான் 5 அடி உயரமான பெண். 100 இறாத்தல் (45 கிலோ) எடையையே கொண்டுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தாராம். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.