Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சபோவிடம் நடிகை கேட் டெல் கஸ்டிலோ பணம் பெற்றாரா?
2016-01-21 11:32:11

மெக்ஸிகோவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சபோ கூஸ்மன் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க வருமாறு, அந் நாட்டின் பிரபல நடிகை கேட்டெல் கஸ்டிலோவை அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

 

எல் சபோ கூஸ்மனிடம் நடிகை கஸ்டிலோ பணம் பெற்றுக்கொண்டாரா எனவும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக மெக்ஸிகோ ஊடகமொன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

மெக்ஸிகோவின் மிகப் பாதுகாப்பான சிறையிலிருந்து கடந்த ஜூலை மாதம் தப்பிச் சென்ற எல் சபோவை மெக்ஸிகோ படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி எல் சபோ மீண்டும் கைது செய்யப்பட்டார். 

 

ஹொலிவூட்டின் பிரபல நடிகர் சீன் பென், கடந்த ஒக்டோபர் மாதம் எல் சபோவை மெக்ஸிகோ காட்டில் இரகசியமாக சந்தித்து செவ்வி கண்டிருந்தமை எல் சபோவை பின் தொடர்வதற்கு அதிகாரிகளுக்கு உதவியாக அமைந்தது என மெக்ஸிகோ சட்ட மா அதிபர் தெரிவித்திருந்தார். 

 

நடிகர் சீன் பெனுக்கும் எல் சபோவுக்கும் இடையிலான மேற்படி சந்திப்புக்கு மெக்ஸிகோவின் பிரபல நடிகை கேட்டெல் கஸ்டிலோ ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

நடிகை கேட்டெல் கஸ்டிலோ மீதான அதீத ஈர்ப்பின் காரணமாகவே அவரைச் சந்திப்பதற்கு எல் சபோ விரும்பியதாகவும் கஸ்டிலோவின் கோரிக்கையின் பேரிலேயே நடிகர் சீன் பென் தன்னை சந்திப்பதற்கு எல் சபோ அனுமதித்தார் எனவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

இந் நிலையிலேயே நடிகை கேட்டெல் கஸ்டிலோவை மெக்ஸிகோ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

 

அவரிடம் அடுத்த வாரம்  விசாரணை நடத்தப்படும் என மெக்ஸிகோ சட்டமா அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

43 வயதான நடிகை கேட்டெல் கஸ்டிலோவுக்கும் 58 வயதான போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சபோவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் விபரங்களை மெக்ஸிகோ ஊடகமொன்று வெளியிட்டிருந்தது. 

 

நடிகை கஸ்டிலோ ஆரம்பித்த வர்த்தக நடவடிக்கையொன்றுக்கு எல் சபோ நிதி அளித்திருக்கலாம் என மேற்படி உரையாடல்கள் மூலம் ஊகிக்க முடிகிறது என மெக்ஸிகோ சட்ட மா அதிபர் ஆர்லே கோமஸ் செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

 

இதேவேளை, எல் சபோவை சந்தித்தமை தொடர்பாக ஹொலிவூட் நடிகரான சீன் பென்னும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். 

 

அமெரிக்க அரசினாலும் தீவிரமாக தேடப்பட்ட நபர் ஒருவரை இரகசியமாக சந்தித்து, அவர் தொடர்பான விபரங்களை மறைத்ததன் மூலம் நடிகர் சீன் பென் சட்டத்தை மீறினாரா என கேள்விகள் எழுந்துள்ளன. 

 

இத்தகைய நபர்களை ஊடகவியலாளர்கள் சந்தித்து செவ்வி காண்பதற்கு உரிமை கொண்டுள்ளனர்.

 

ஆனால், நடிகர் சீன் பென் ஓர் ஊடகவியலாளர் அல்லர் எனவும், ஹொலிவூட் தொழிற்துறையை ஊடகத்துறையாக கருத முடியாது எனவும் சிலர் கூறுகின்றனர். 

 

அதேவேளை, எல் சபோவை நேர் கண்ட விடயத்தில் அவர் ஊடகவியலாளராகவே செயற்பட்டார் என வேறு சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக தீவிர வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

 

 

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் டேனியல் ரிச்மன் இது தொடர்பாக கூறுகையில், போதைப் பொருள் கடத்தல் நபரை சந்தித்தமை சீன் பென் மீதான சட்ட நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைய முடியாது.

 

ஆனால், எல் சபோ கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு ஏதேனும் வழியில் உதவியிருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்” எனக்கூறியுள்ளார். 

 

இதேவேளை, எல் சபோவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக்கூடாது எனத் வலியுறுத்தி அவரின் சட்டத்தரணியான ஜோஸ் லூயிஸ் கொன்ஸாலெஸ் மோஸா, மெக்ஸிகோ உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.