Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சர்ச்சைகளுக்கு மத்தியில் 88 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று
2016-02-28 11:14:37

88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று இரவு, அமெ­ரிக்­காவின் ஹொலிவூட் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

2015 ஆம் ஆண்டு வெளி­யான ஹொலிவூட் திரைப்­ப­டங்கள் இவ்­வி­ரு­துக்கு கருத்­திற்­கொள்­ளப்­படும். 

 

அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் (AMPAS) எனும் அமைப்­பினால் இவ்­வி­ரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

இதனால் அக்­க­டமி அவார்ட்ஸ் (அக்­க­டமி விரு­துகள்) என இவ்­ வி­ரு­துகள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

 

மொத்­த­மாக 24 பிரி­வு­களில் விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. சிறந்த வெளி­நாட்டு மொழித் திரைப்­படம், சிறந்த ஆவ­ணப்­படம், சிறந்த அனி­மேஷன் குறுந்­தி­ரைப்­படம் ஆகிய விரு­து­களும் இவற்றில் அடங்கும். 

 

சிறந்த திரைப்­படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்­குநர் ஆகி­யவை முக்­கிய ஒஸ்கார் விரு­து­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றன.

 

தொடர்ச்­சி­யாக இரண்­டா­வது வரு­ட­மாக கறுப்­பின நடி­கர்கள், இயக்­கு­நர்கள் எவரும் ஒஸ்கார் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை என்­பதால் ஒஸ்கார் வெள்­ளை­யின மய­மா­கி­யுள்­ளது என்ற குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

 

பலர் ஒஸ்கார் விழாவை புறக்­க­ணிக்கப் போவ­தா­கவும் அறி­வித்­துள்­ளனர்.  

 

இதனால் அக்­க­டமி அங்­கத்­த­வர்­களில் சிறு­பான்­மை­யினர் மற்றும் பெண்­களின் எண்­ணிக்­கையை 2020 ஆம் ஆண்டில் இரு மடங்­காக அதி­க­ரிப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இம்­ முறை சிறந்த திரைப்­ப­டத்­துக்­கான ஒஸ்கார் விரு­துக்கு தி பிக் ஷோர்ட், பிரிட்ஜ் ஒவ் ஸ்பைஸ், புரூக்ளின், மெட் மெக்ஸ்: பியூரி ரோட், தி மார்ஷன், தி ரெவனன்ட், ரூம், ஸ்பொட்லைட் ஆகிய திரைப்­ப­டங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. 

 

சிறந்த நடிகர் விரு­துக்கு லிய­னார்டோ டி கெப்­ரியோ, பிரையன் கிரான்ஸ்டன், மெட் டெமோன், மைக்கல் பாஸ்­பெண்­ட னர், எடி ரெட்மேய்ன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சிறந்த நடிகைக்கான விருதுக்கு கேட் பிளான்சர்ட், பிரையி லார்சன், சார்லட் ரம்ப்பிளிங், சோரைஸ் ரெனன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.