Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வசூலில் சாதனைகள் படைக்கும் டெட்பூல்
2016-02-28 10:04:10

கடந்த 12 ஆம் திகதி வெளி­யான டெட்பூல் திரைப்­படம் வசூலில் சாத­னை­களைப் படைத்­துக்­ கொண்­டி­ருக்­கி­றது. மார்வெல் சுப்­பர்­ஹீரோ கதை­யம்சம் கொண்ட இத்­ தி­ரைப்­ப­டத்தை டிம் மில்லர் இயக்­கி­யி­ருந்தார். 

 

ரையன் ரெனோல்ட் பிர­தான வேடத்தில் நடித்­துள்­ள­துடன் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­கவும் செயற்­பட்டார். டுவென்­டியத் சென்­சுரி பொக்ஸ் நிறு­வனம் இப்­ப­டத்தை விநி­யோ­கித்­துள்­ளது. எக்ஸ்மேன் திரைப்­பட வரி­சையில் 8 ஆவது படம் இது­வாகும்.

 

வெறும் 5.8 கோடி டொலர் (சுமார் 817 ரூபா) செலவில் தயா­ரிக்­கப்­பட்ட படம் இது. ஆனால், இரு வாரங்­க­ளுக்குள் 50 கோடி டொலர்­க­ளுக்கு (7045 கோடி ரூபா) அதி­க­மாக வசூ­லித்­துள்­ளது.

 

ஸ்பைடர் மேன், பெட் மேன் போன்ற சுப்பர் ஹீரோ கதை­யம்சம் கொண்ட திரைப்­படம் இது. ஆனால், சில காட்­சிகள் கார­ண­மாக அமெ­ரிக்­காவில் R சான்­றி­த­ழையே இப்­படம் பெற்­றுள்­ளது. அதா­வது, இப்­ப­டத்­திற்குப் பிள்­ளை­களை அழைத்­துச்­செல்­வ­தற்­குமுன் இப்­படம் பற்றி பெற்­றோர்கள் நன்கு அறிந்­து­கொள்ள வேண்டும்.  

 

இந்த R சான்­றிதழ் இப்­ப­டத்­துக்கு ஒரு பின்­ன­டை­வுதான். எனினும், R சான்­றிதழ் திரைப்­ப­டங்­களில் அதிகம் வசூ­லித்த திரைப்­ப­ட­மா­கவும் எக்ஸ்மேன் திரைப்­பட வரி­சையில் மிக அதி­க­மாக வசூ­லித்த திரைப்­ப­ட­மா­கவும் டெட்பூல் விளங்­கு­கி­றது. 

 

இப்­ப­டத்தில் நடித்­த­மைக்­காக ரையன் ரெனோல்ட்­ஸுக்கு 20 லட்சம் டொலர் சம்­ப­ளமே வழங்­கப்­பட்­டது.

 

ஆனால், படத்தின் அபார வசூல் கார­ண­மாக அவ­ருக்கு மேலும் ஒரு கோடி டொலர் போனஸாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளை இத்தொகை இன்னும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.