Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'ஓய்' என்ன அா்த்தம்?
2016-02-26 15:14:36

‘ஓய்’ என்­ப­தற்கு என்ன அர்த்தம் என்று அக­ரா­தியில் தேடி­ய­போது நிறைய அர்த்­தங்கள் கிடைத்­தன. ஒரு­வரை கூப்­பி­டு­வ­தற்கு பயன்படுத்­தப்­படும் சொல்­லா­கவும் ‘ஓய்’ இருக்­கி­றது. ‘ஜோடிப்­பது’ என்றும் இன்­னொருள் பொருள் இருக்­கி­றது.

 

 

அதா­வது எது­வுமே இல்­லாத ஒரு விடயத்தை உண்மை போலவோ அல்­லது பொய் மாதி­ரியோ ஜோடிப்­பது என்று அர்த்தம்.

 

தவிர்க்க முடி­யாத ஒரு சூழ்­நி­லையில் ஹீரோவின் வீட்­டுக்கு வரும் ஹீரோயின் அங்கு ஜோடிக்கும் ஒரு விடயத்தை மைய­மாகக் கொண்ட கதை இது என்­பதால் ‘ஓய்’ என்ற டைட்டில் படத்­துக்கு கச்­சி­த­மாகப் பொருந்­தி­யது” என்­கிறார் அறி­முக இயக்­குநர் பிரான்சிஸ் மார்கஸ்.

 

“மோகன் ராஜா, ஆர்.டி. நேச­னிடம் உதவி இயக்­கு­ந­ராகப் பணி­யாற்­றி­விட்டு இப்­போது இயக்­குநர் ஆகி­யுள்ளேன். கீதன் பிரிட்டோ ஹீரோ ஈஷா ஹீரோயின்.

 

ஆனால், படத்தின் உண்­மை­யான ஹீரோ இளை­ய­ரா­ஜா தான். அவர் தான் இந்தக் கதையைக் கேட்டு முடிவு செய்து உடனே பாடல் கம்­போசிங் செய்து கொடுத்தார்.

 

அவர் தான் எங்­க­ளுக்கு முது­கெ­லும்பு. படத்தில் தாத்தா வேடத்தில் நடித்­துள்ள சங்­கிலி முரு­க­னிடம், இளை­ய­ரா­ஜாவிடம் கதை சொல்ல வேண்டும் என கேட்­ட­போது அவரை சந்­திக்க அனு­மதி வாங்கிக் கொடுத்தார். இந்தப் படத்தின் புரொ­டக் ஷன் எக்­ஸி­கி­யூட்­டிவும் சங்­கிலி முரு­கன் தான்.

 

இது ஹீரோ­யி­னுக்கு முக்­கி­யத்­துவம் கொண்ட கதை. படம் பார்த்த பிறகு நாம் அனை­வரும் இந்த நாட்­டி­லேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்­படும்.

 

அப்­படி ஏற்­பட்டால் அதுவே இந்தப் படத்­துக்கு கிடைத்த பெரிய வெற்றி. சென்சார் குழு ‘யு’ சர்ட்­டிஃ­பிகேட் கொடுத்­துள்­ளது. அடுத்த மாதம் படம் ரிலீ­சா­கி­றது....” என்ற பிரான்சிஸ் மார்கஸ், பொள்­ளாச்­சியில் ஷூட்டிங் நடத்­தி­யுள்ளார்.

 

அசல் கிரா­மத்துக் கதை. இளை­ய­ராஜா இசையில் 1001 ஆவது பட­மாக உரு­வா­கி­யுள்ள இதில் யாராவது கூப்பிட்டா. திரும்பிப் பாருங்க. இல்லன்னா கண்டதையும் ஜோடிப்பாங்க’ என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.