Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாடகா் பென்னியின் கனவுகள்
2016-02-26 15:05:24

பென்னி தயாள்... இப்­போ­தைய தமிழ் சினி­மாவின் ‘மோஸ்ட் வான்டட்’ சிங்கர்! ‘அழ­கிய தமிழ்­மகன்’ படத்தில் ‘மது­ரைக்குப் போகா­தடி’, ‘விண்­ணைத்­தாண்டி வரு­வா­யா’வில் ‘ஓ ம­ணப்­பெண்ணே’ பாடல்­களில்  ஹிட்­ட­டித்து, ‘யாருப்பா இந்தப் பையன்?’ எனக் கேட்க வைத்­தவர்.  

 

இப்­போது, ‘நானும் ரவு­டி தான்’ வரை வொய்ஸில் மாஸ் காட்டி வசீ­க­ரிக்­கிறார். மும்பை, சென்னை எனப் பறந்து பறந்து பாடல் பாடுபவரை சந்தித்தபோது, 

 

‘‘எனக்கு இசை பத்தி எதுவும் தெரி­யாது. ராகம், தாளம்னு எதையும் படிக்­கலை. ஆனா, சின்ன வய­சு­லயே நிறைய பாடல்கள் கேட்டு வளர்ந்தேன்.

 

குறிப்பா, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட ‘ரோஜா’ பட பாடல்­களைக் கேட்­டதும், வருங் ­கா­லத்­துல பாட­கனா ஆக­ணும்னு முடிவு பண்­ணிட்டேன்!’’ - தலையில் தொப்பி, காதில் வளையம், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் என வெஸ்டர்ன் லுக்கில் தெறிக்க விட்­ட­படி பேசு­கிறார் பென்னி. 

 

‘‘எனக்கு பூர்­வீகம் கேரளா. பொறந்து வளர்ந்­த­தெல்லாம் அபு­தா­பி­யில. அப்பா எம்.பி.தயாள், அம்மா சியாமா தயாள். ஒரு அண்ணன்  பெங்­க­ளூ­ருல வேலை பார்த்­துட்டு இருக்கார்.

 

நான் இந்­த­ள­வுக்கு வரக் கார­ணமே அப்­பாவும் அம்­மா­வும் தான். ஸ்கூல் படிக்­கி­றப்ப ஒரு மேடை­யையும் விட்­ட­தில்ல.

 

மெட்ராஸ் கிறிஸ்­டியன் காலேஜ்ல பி.கொம் படிக்­கும்­ போதும் பாட்­டுக்­காக நிறைய பரிசும், பாராட்டும் வாங்­கி­யி­ருக்கேன்!’’ என நினை­வு­களைப் பகிரும் பென்­னிக்கு, டான்ஸ் என்­றாலும் உயிர். கேர­ளாவின் மோகி­னி­யாட்­டத்தை முறை­யாகப்  பயின்­றி­ருக்­கிறார்.

 

‘‘டிகிரி முடிச்­சதும் தனியா ஷோ பண்­ணிட்டு இருந்தேன். அப்­ப­டியே ஒவ்­வொரு மியூசிக் டைரக்டர் கிட்­டயும் சான்ஸ் கேட்பேன். மூணு வருஷம் அலைஞ்­சது தான் மிச்சம். எதுவும் நடக்­காம ரொம்ப நொந்து போயிட்டேன்.

 

வேற வழி­யில்­லாம ஒரு பி.பீ.ஓ.,வுல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க சேர்ந்து மூணா­வது நாள், ரஹ்மான் சார் ஆபீஸ்ல இருந்து போன்! என்­னால நம்­பவே முடி­யலை. ஏன்னா, நான் சான்ஸ் கேட்­காத ஒரே மியூசிக் டைரக்டர் ரஹ்மான் சார் தான்.

 

உடனே போய்ப் பார்த்தேன். ரஹ்மான் சார் யார்­கிட்­டயும் ரொம்ப பேச­மாட்டார். அவர்­கிட்ட நான் ரெகு­லரா பாட ஆரம்­பிச்­சதும், ‘வேலையை விட்­ருங்­க’னு அவரே நம்­பிக்­கையா சொன்னார். அந்தத் தரு­ணத்தை மறக்­கவே முடி­யாது! 

 

என் முதல் பாட்டு ‘சக்­க­ர­கட்டி’ படத்­துல ‘சின்­னம்மா சிலக்­கம்மா’. அதி­லேயே ‘டாக்ஸி டாக்ஸி’ பாட்டும் பாடினேன். ஆனா, முதல்ல  வெளி­வந்­தது எஸ்.பி.பி சாரோட சேர்ந்து பாடின ‘பல்­லே­லக்கா’ சோங் தான்.

 

எடுத்­த­துமே ரஜினி சாருக்கு... இந்தப் பேறு எல்லாருக்கும் கிடைக்குமா!’’ என உருகும் பென்னியின் கனவு, மெலடிகள் நிறையப் பாடுவதும் இசையமைப்பாளர் ஆவதும் தானாம்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.