Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'நிறைய பேரால் நேசிக்கப்படுவது சுகம்'- விஜய் சேதுபதி
2016-02-26 14:59:07

ஒவ்வொரு ஹீரோவுக்கும் கனவாக இருப்பது அதிரடி பொலிஸ் வேடம்.

 

இப்போது விஜய் சேதுபதியின் சீசன். சேதுபதி படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு.

 

சேது­பதி. முதல் தட­வையா போலிஸ் கெட்டப். பண்­ணை­யாரும் பத்­மி­னியும் நல்ல படமா இருந்­தாலும், வெற்றிப் பட­மான்னு ஒரு குழப்பம் இருக்­கற படம். இருந்­தாலும் அதே இயக்­கு­ந­ரோட அடுத்த படம், அதுக்கு மாறான எக்‌ஷன் ப்ளாட். எப்படி வந்­தி­ருக்கு?”

 

“நல்லா வந்­தி­ருக்கு. பெமிலி எண்­டர்­டெய்னர் வித் எக்‌ஷன். சோங்க்ஸ்லாம் நெட்ல பாத்து, ஒரு நம்­பிக்­கை­யோட வரு­வீங்க. அதை பூர்த்தி செய்ற படம். பர­ப­ரப்­பான, பெமிலி ஒரி­யண்டட் பொலிஸ் ஸ்டோரி. உங்க நேரத்தை வீண­டிக்­கா­துன்னு நான் நம்­பறேன்”

 

என்ன கதை?


மதுரையில் தன் மனைவி, மகன் மகளுடன் வசித்து வரும் சேதுபதி என்ற இன்ஸ்பெக்டர் எல்லா கேஸ்களையும் டீல் செய்வது போல் ஒரு கேசை டீல் செய்யச் செல்கிறார். அப்போது எதிர்பாராத ஒரு பிரச்சினையில் சிக்குகிறார்.

 

அந்த வழக்கு சேதுபதியை விரட்டுகிறது. பயந்தாரா? பாய்ந்தாரா என்பது தான் படம்.

இது முழுமையான எக்ஷன் படம். குடும்ப சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். கொமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். ஒவர் பில்டப்புகள் இருக்காது.

 

பன்ச் வசனங்கள், பாய்ந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்காது. கதையின் போக்கில் நடக்கும் சம்பவங்கள் படத்தை வலுவாக்கும்.

 

ரம்யா நம்­பீசன்?


பீட்­சால நடிக்­க­றப்ப நான் யார்னே தெரி­யாது. ரம்யா அப்­பவே நிறைய படம் மலை­யா­ளத்­துல நடிச்­ச­வங்க. ரொம்ப கோ ஆப­ரேடிவ்.

 

இந்தப் படத்­துக்கு அவர் கமிட் ஆனது எனக்கு சந்­தோ­ஷ­மான விஷயம். அவங்க ஒரு கெரக்டர் பண்­ணினா, அதுல நீங்க ரம்யா நம்­பீ­சனை மறந்து கெரக்­ட­ரைத் தான் பார்ப்­பீங்க. இது­லயும் அப்­டித்தான்.

 

ஷார்ட் ஃப்லிம் பண்ற புது டைரக்­டர்­க­ளுக்கு சான்ஸ் குடுக்­க­ற­துல நீங்க முக்­கிய இடம் வகிக்­கி­றீங்க. கதை கேக்­க­றப்ப புது டைரக்­ட­ரான்னு பார்ப்­பீங்­களா.. இல்ல அவர் பண்­ணின ஸ்கிரிப்டை வெச்சு முடிவு பண்­ணு­வீங்­களா?

என்ன படம் பண்­ணீ­ருக்­காங்­கன்னு பார்க்­க­றதும் முக்­கி­யம்தான்.. போடா போடி எனக்குப் பிடிச்ச படம். அந்தப் படம் பண்­ணின டைரக்­டர்­ன­தும்தான் நானும் ரௌடி­தா­னுக்கு கதை­கூட கேட்­காம ஒத்­து­கிட்டேன்.

 

மத்­த­படி ஒரு புது டைரக்­ட­ருக்கு விசிட்டிங் கார்டே, கதையும் அதை அவர் சொல்ற வித­மும் தான்.

 

‘ஆரஞ்­சு­மிட்டாய்’, ‘பண்­ணை­யாரும் பத்­மி­னியும்’, ‘இதற்­குத்­தானா ஆசைப்­பட்டாய் பால­கு­மாரா’, ‘நானும் ரௌடிதான்’. இப்ப சேது­பதி.. வித­வி­த­மான முயற்­சிகள். எப்­படி இப்­படி?

 

முயற்சி பண்றோம். பார்க்­க­ற­வங்­க­ளுக்கு பிடிக்­கணும். வெற்றி அடைஞ்சா மகிழ்ச்சி. நீங்க சொன்­ன­துல ஆரஞ்சு மிட்டாய் மட்­டும் தான் எக்ஸ்­ப­ரி­மெண்ட்னு சொல்­லலாம்.

 

என் வய­சுக்கு அந்த வய­சான கெரக்­டர்ல நடிச்­சதும், அதுக்கு வசனம் எழு­தி­னதும் எக்ஸ்­ப­ரி­மெண்ட் தான். அதுக்கு தயா­ரிப்­பா­ள­ருக்­குத் தான் நன்றி சொல்­லனும். அதை­யெல்லாம் மீறி ஒரு படம் ரசி­கனை சேரனும், அவங்க ரசிக்­க­னும்­னு தான் ஆசை.

 

ஒவ்­வொரு படத்­துக்கும் வித­வி­த­மான பொடி­ லெங்வேஜ். அப்­ப­டீன்னா கெரக்­டர்­க­ளுக்­காக மனி­தர்­களை அதி­கமா அப்சர்வ் பண்­ணுவீங். இல்­லையா?

 

ஆமாம். எதிர்ல இருக்­க­ற­வங்க என்ன சொல்­றாங்க, பொடி லேங்க்வேஜ் எல்­லாத்­தையும் பார்ப்பேன். என்­கிட்ட கேள்வி கேட்­க­றீங்­கன்னா, உட்­கார்ந்­தி­ருக்­க­றத வெச்சு என்ன மன­நி­லைல கேக்­க­றீங்­கன்னு யூகிக்க டிரை பண்­ணுவேன்.

 

எனக்கு வாசிப்பு அனு­பவம் கம்மி. நிறைய படிக்­க­னும்னு ஆசைப்­ப­டறேன். கூடிய சீக்­கிரம் ஆரம்­பிப்பேன். வாசிப்பு மூலமா கத்­துக்­கலாம், அதுக்­க­டுத்து ஆட்­களை அப்சர்வ் பண்­றது மூலமா கத்­துக்­கலாம். நடி­க­னுக்கு அது முக்­கி­யமா தேவைன்னு நம்­பறேன்.

 

நடிக்­க­ற­துல சேலஞ்ச்னு எதைச் சொல்­லு­வீங்க?

இப்ப நீங்க அடுத்­தது என்ன கேள்வி கேட்­கப்­போ­றீங்­கன்னு தெரி­யாது. நான் என்ன பதில் சொல்­லப்­போ­றேன்னு உங்­க­ளுக்குத் தெரி­யாது.

 

ஆனா சினி­மால, எதிர்ல இருக்­க­ற­வங்க என்ன சொல்­லப்­போ­றாங்­கன்னு எனக்குத் தெரியும். ஸ்கிரிப்ட் படிச்­சி­ருப்பேன். ஆனாலும் அது தெரி­யா­த­மா­திரி நான் இருக்­கனும். அதான் சவால். அதான் நடிப்பு.

 

இப்­பவே உங்க கைல ஆறு படம் ரிலீஸுக்கு காத்­தி­ருக்கு. 2016 இல் கலக்­கப்­போ­றீங்க


அப்­டிலாம் இல்­லைங்க. எனக்கு பய­மாத்தான் இருக்கு. தொடர்ந்து என் மூஞ்­சி­யவே பாத்­துட்­டி­­ருந்தா போர­டிச்­சு­டு­மோன்னு பயம். ஒரு­வேளை பிடிச்சுப் போச்­சுன்னா செலஞ்­சிங்­காவும் இருக்கும். நானும் ஆர்­வ­மாத் தான் இருக்கேன். 

 

உங்­க­ளுக்­குள்ள ஒரு ரைட்டர் இருக்­கார்னு தோணுது. டைரக்‌ஷன் ஆசை உண்டா?

எழுதப் பிடிக்கும். இப்ப ஒரு ஷோர்ட் ஃப்லிம்க்கு வசனம் எழு­தி­ருக்கேன். டைரக்‌ஷன் ஆசை இருக்கு, ஆனா அவ்ளோ பொறுப்பு இருக்­கற வேலை. அதுக்கு நான் இன்னும் தயா­ரா­கல.

 

 

என்னை அறி­மு­கப்­ப­டுத்­தின குரு­நாதர் சீனு­ரா­ம­சாமி சார். அவர், தென்­மேற்குப் பரு­வக்­காற்று, நீர்ப்­ப­றவை, இடம் பொருள் ஏவல், இப்ப தர்­ம­துரை பண்றார். அஞ்சு வரு­ஷத்­துல நாலு படம். 

 

ஆனா அதே அஞ்சு வரு­ஷத்­துல, தர்­ம­துரை எனக்கு பதி­னா­றா­வது படம். அப்ப இயக்­கு­நர்னா, படம் முடிஞ்சு அடுத்த படத்­துக்கு அவ்ளோ உழைப்பு குடுக்­கனும். அதெல்லாம் பண்­ண­னும்னா, நான் இன்னும் நிறைய கத்­துக்­கனும்.

 

புதுப்­பேட்டை இப்ப டிவில போட்­டாலும் ‘டேய் விஜய் சேது­ப­தி­டா’ன்னு அடை­யாளம் கண்­டுக்­க­றாங்க. சின்ன சின்ன வேஷங்­கள்ல நீங்க நடிச்­சது இப்ப கவ­னிக்­க­றாங்க. அந்த, கவ­னிக்­கப்­ப­டாத நிலைல இருந்து இப்ப, இந்த இடத்துக்கு வந்தது. இந்த நேரத்துலகூட உங்களை பேட்டி, அது, இதுன்னு கேமரா சூழ வர்றது இதையெல்லாம் எப்டி எடுத்துக்கிறீங்க? ப்ரஷரா பார்க்கறீங்களா?”

 

சத்தியமா இல்லைங்க. இதுக்காக ஏங்கிருக்கேன். தவம் கெடந்திருக்கேன். நான் யாரோ. இருந்தாலும் முகம் தெரியாத பலர் குழந்தைகள்லேர்ந்து பெரியவங்க வரை, சிரிச்ச முகத்தோட வரவேற்பாங்க. நல்லாருன்னு வாழ்த்தறாங்க. நிறைய பேரால நேசிக்கப்படுவது சுகம், ஆசிர்வாதம் பாரமல்ல.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.