Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இயக்குநர் சஜித்கானுடன் திருமணமா? - தமன்னா விளக்கம்
2016-02-22 09:46:05

இந்தி நடிகர் சஜித்கானை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான செய்திகளுக்கு  நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார்.

 

நடிகை தமன்னாவையும், பொலிவூட் இயக்குநர் சஜித் கானையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவியுள்ளன.

 

சஜித்கான் இந்தியில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களை தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கினார்.

 

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது.

 

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘இயக்குநர் சஜித் கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ஹிம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன்.

 

அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வியடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்.

 

இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாகப் பழகினோம்.

 

படப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது.

 

எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்றடைந்து விடுகிறது.

 

அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவியிருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை” என்றார்.

 

“ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன்.

 

பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமௌலி எனக்கு கடவுளாக தெரிகிறார்.

 

இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங் கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசையிருக்கிறது.

 

எப்படித்தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. 

 

ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன்’ எனவும் தமன்னா தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.