Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அலைச்சல், அவமானங்களை கடந்து சினிமா இலட்சிய பயணத்தை தொடர்ந்தேன் - நடிகர் த.குணசேகரன்
2016-02-21 11:53:47

குயிலின் அள­வுக்கு பொறு­மையும் கூடாது. குதி­ரையின் அள­வுக்கு பட­ப­டப்பும் கூடாது. பொறு­மையைக் கடைப்­பி­டிக்க நினைப்­ப­வர்கள் பசுவைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

 

தென்­னிந்­திய சினி­மாவில் நடிக்க முயற்­சித்து பல்­வேறு சோத­னை­க­ளையும் அனு­ப­வித்து பசுவைப் போன்று பொறு­மை­யுடன் செயல்­பட்டு வெற்றி பெற்ற ஒரு­வரே இன்று உங்­க­ளுடன் பேசப்­போகும் இளை­ஞ­ராவார். 

 

 

இவர் 31 வய­தான நடிகர் த.குண­சே­கரன். தமி­ழ­கத்தில் ‘சிலோன் குணா’ என அழைக்­கப்­ப­டு­கிறார்.

 

“நான் லிந்­துல மெரே­யாவில் பிறந்­தவன். மெரேயா தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்றேன்.

 

எனது கல்வியைத் தொடர இய­லாத நிலையில் ஏனை­யோரைப் போல தொழி­லுக்­காக கொழும்பு நக­ருக்கு நகரத் தொடங்­கினேன். அங்கும் ஏள­னமும், வேத­னையும் சோத­னை­களும் எனக்குள் புகுந்து கொண்­டன. 

 

பாட­சாலை நாட்­களில் நாடகம், விவாதம், வில்­லுப்­பாட்டு என பல்­வேறு கலை­க­ளுக்குள் நுழைந்தேன். சிறு வயது முதலே எனது அடி மனதில் எனது உரு­வமும் சினிமா படம் மூல­மாக தியேட்டர் திரையில் விழ வேண்டும் என்ற சின்ன ஆசையும் ஏற்­பட்­டது. நாட்கள் தொலையத் தொலைய அந்த சின்­னஞ்­சிறு ஆசை வேர்­விட ஆரம்­பித்­தது. 

 

எனது வீட்­டுக்குள் நடிப்பு ஒத்­தி­கையை நானே மேற்­கொண்டேன். சினிமாப் படங்­களைப் பார்த்து அப்­ ப­டங்­களின் நடி­கர்கள் பேசும் வச­னங்­களை வீட்­டுக்குள் பேசுவேன்.

 

எனது சிறு­வ­யது நண்­பர்கள் அன்று என்னைப் பார்த்து கிண்டல் வார்த்­தை­களை வெளிப்­ப­டு­த­து­வார்கள். அதற்­குள்ளும் ஒரு மெல்­லிய இன்பம் எனக்கு கிடைத்­தது. அந்த இன்பம் அக்­காலத்தில் எனக்கு ஒரு ஊட்டச் சத்­தாக இருந்­தது. 

 

இந்­ நி­லையில் நடிகர் பிரபுதேவாவின் நட­னங்கள் என்னைக் கவர்ந்­தன. எனது வீட்­டுக்குள் சிறு­வ­யதில் நானே நடனம் ஆடத் தொடங்­கினேன்.

 

எனது அம்மா எனது நட­னத்தை பார்த்து மிக மகிழ்ச்­சி­யடைந்தார். “நாளில் தம்பி ராசா நல்லா டான்ஸ் ஆடுற, பிரபுதேவா மாதிரி ஆடுற நீ சினி­மா­வில நடிக்­கனும். அத நான் பார்க்­கனும்” என சொல்ல எனக்குள் நட­னக் ­க­லையின் ஆர்வம் அதி­க­ரித்­தது.

 

என் அம்­மாவின் இந்த ஆசிர்­வா­தமும் எதிர்­பார்ப்பும்  என் மனதில் புகைந்து கொண்டே இருக்க, சினி­மாவின்  நடிப்பு ஆசைக்குள் நானும் நுழைந்தேன்” என தன்னைப் பற்றி கூறினார் குண­சே­கரன்.

 

“எவ்­வாறு சினி­மா­வுக்குள் நுழைய  காலடி வைத்­தீர்கள்?” எனக் கேட்டோம்.

 


“சினிமாத் துறையில் ஏமா­று­ப­வர்­க­ளை ­விட ஏமாற்­று­ப­வர்­களே அதி­க­மாக உள்­ளனர். முதன்முத­லாக எமது நாட்டின் ஒரு பட நிறு­வ­னத்தில் இணைந்தேன்.

 

சிறிது காலத்தில் அந்த நிறு­வ­னத்­தினர் என்னை ஏமாற்­று­கின்­றனர் என தெரிந்­ததும் மெது­வாக விலகிக் கொண்டேன்.

 

பின்னர் சில விளம்­ப­ரங்­களில் எனது நடிப்பை அடை­யா­ளப்­ப­டுத்த முடிந்­தது” என குண­சே­கரன் பதி­ல­ளித்தார்.

 

“பின்னர் எவ்­வாறு  தமி­ழக சினி­மாத்­து­றைக்குள் நுழைந்­தீர்கள்?”

 


“சினிமா நடிப்பு ஆசை என்­னை­வி­ட­வில்லை. உற­வினர் ஒரு­வரின் உத­வி­யோடு தமி­ழக சினி­மாவில் என் முகத்தை மையப்­ப­டுத்­தலாம் என்ற ஆசை­யுடன் தமி­ழகம் பய­ண­மானேன்.

 

அவ­ராலும் ஏமாற்­ற­ம­டைந்தேன். மீண்டும் நாடு திரும்­பிய நான் சில மாதங்­களில் மீளவும் தமி­ழகம் பய­ண­மானேன். 

 

லொட்ஜ் ஒன்றில் தங்கி, வட பழனி முழு­வதும் சினிமா ஸ்டுடி­யோக்­களின் படி­களில் ஏறி இறங்­கினேன். கால் வலி உயிரை வாங்கும். கடும் வெயில் உடலைத் தாக்கும். டீக்­கடை பெஞ்­சு­களில் உட்­கார்ந்து  டீயை குடித்துக் கொண்டே எனது நடிப்பு ஆசையை வளர்த்துக் கொண்டேன். 

 

இவ்­வா­றான நிலையில் ஒரு நாள் லொட்ஜில் ஆதித்யா தொலைக்­காட்சி, ஆதித்யா பாக்­கி­ய­ராஜாவை (காளிதாஸ்) திடீ­ரென சந்­திக்கும் வாய்ப்பு ஏற்­பட்­டது.  

 

என்­னைப்­ பற்­றிய விப­ரத்தை கேட்ட அவர். நான் இலங்­கையைச் சேர்ந்­தவன் என அறிந்­ததும் சந்­தோ­சப்­பட்டு தங்­கு­வ­தற்கு ரூம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். அவரின் அப் பெரும் உதவி வாழ்க்­கையில் மறக்க இய­லா­த­தாகும். 

 

பின்னர் எனது பல்­வேறு வகை­க­ளி­லான தோற்­றங்­களைக் கொண்ட புகைப்­ப­டங்­க­ளுடன் ஸ்டுடி­யோக்­களின் வாசல்­ வரை சான்ஸ் தேடி அலைந்த அக்­ காலம் ஒரு அனு­ப­வ­மாகும்.  

 

ஸ்டுடியோ காவ­லாளி கேட்கும் கேள்­வி­க­ளுக்கு பதில் வழங்­கிய எனது நடிப்பு ஆர்வம் சில நேரங்­களில் உடைந்து விழக்­கூ­டிய நிலைக்கு தள்­ளி­யது.  

 

அவ­மானம், அலைச்சல் எல்­லா­வற்­றையும் கடந்து எனது சினிமா இலட்­சிய பய­ணத்தை தொடர்ந்தேன்.  

 

பல இயக்­கு­நர்கள், தயா­ரிப்­பா­ளர்­களை சந்­தித்து, எனது சினிமா வெறித்­த­னத்தை அடை­யாளம் காட்­டினேன். 

 

எனது உரு­வ­மைப்பும், தாடியும் என்னை வில்லன் கதா­பாத்­தி­ரத்­திற்கு ஏற்­றவன் என்­பதை இனங்­காட்­டி­ன.

 

அதன் பய­னாக ‘கடை­ய­னாறு’ படத்தில் வில்லன் நடி­கரின் வலது கை அடி­யா­ளாக நடிக்கும் வாய்ப்பு எட்­டி­யது.

 

அவ் ­வாய்ப்பை முறை­யாக நம்­பிக்­கை­யுடன் பயன்­ப­டுத்திக் கொண்டேன். இப்­போது ‘சிலோன் குணா’ என சினி­மாத்­து­றை­யினர் அழைக்கத் தொடங்­கினர். 

 

“இதன் பின்னர் படங்­களில் நடிக்கும் வாய்ப்புக் கிட்­டி­யதா?”

 

“ஆமாம் இப்­போது 21 படங்­களில் நடித்து முடித்­துள்ளேன். கடுகு சிறி­தா­னாலும் அதன் காரம் அதிகம்.

 

அதே­போன்று சிறு கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருந்­தாலும் அது ரசி­கர்­களின் மனதில் நிலை கொள்ளும் வகை­க­ளி­லான கதா­பாத்­தி­ரங்­க­ளாகும். 

 

கஸ்­தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’, படத்தில் வில்லன் பாத்­தி­ரத்தில் வாய்ப்பு கிடைத்­ததும் ஒரு சாத­னை தான். எனது அம்மாவின் எதிர்­பார்ப்பு சிறி­த­ள­வா­வது நிறை­வே­றி­யுள்­ளது. 

 

“உங்கள் எதிர்­கால திட்டம் என்ன?


“இலங்­கையின் தமிழ் சினிமா வளர்ச்­சிக்கு உயிர் கொடுக்க வேண்டும். அதற்­கான உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்ளேன். அதற்­கான ஆரம்ப செயல்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

 

எதிர்­கா­லத்தில் எனது கலைப்­பணி விரி­வ­டையும் என்ற நம்­பிக்­கை­யோடு  செயல்­ப­டு­கிறேன். ‘சக்ஸஸ் கிரி­யேஷன்ஸ்’ எனும் நிறு­வனம் கொழும்பு மாளி­கா­வத்­தையில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

 

“இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு நீங்கள் கூற விரும்­பு­வது என்ன?”


இன்­றைய இளை­ஞர்கள் எந்தத் துறையில்  செயல்­பட  விரும்­பு­கி­றீர்­களோ அதை  உரிய வகையில் கற்­றுக்­கொள்ள வேண்டும்.

 

 

முதலில் உங்­களின் தெரி­வுத்­து­றையைப் பற்­றிய அறிவை பெற்­றுக்­ கொள்­ளுங்கள். கற்­றுக்­கொள்­ளுங்கள். இலட்­சியம் இல்­லாது போனால் எதையும் சாதிக்க இய­லாது.

 

எனது கலைப்­ ப­ய­ணத்தின் ஆரம்­பமே மிக கஷ்­ட­மா­னது. நடந்து வந்த பயணம் கரடு முர­டா­னது. கடந்து வந்த பாதையை மறந்தால் கடக்கப் போகும் பாதை மிக கடி­ன­மா­ன­தாக இருக்கும். 

 

நடிகர் நாகேஷ் சினிமா வாய்ப்பைத் தேடி ஸ்டுடியோ, ஸ்டுடி­யோ­வாக சென்ற தரு­ணத்தில் பிர­பல உலகப் புகழ் கவிஞர் ஒருவர் நாகேஷை உன் முகத்தை  கண்­ணா­டியில் பார். இவன் எல்லா நடிக்க போறன்­களாம் என்­றாராம் ஏள­ன­மாக.

 

இறு­தியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். ஆகியோர் தங்­களின் படங்­களில் நடிகர் நாகேஷ் இல்­லா­விட்டால் நடிக்க இய­லாது என்று சொன்­னார்கள் என கேள்­விப்­பட்­டுள்ளேன். 

 

இதனால் முயற்­சியை கைவி­டக்­கூ­டாது. இன்று உலகம் போற்றும் நடி­கர்கள் இரு­வ­ரு­டனும் நடித்து நாகேஷ் புகழ் பெற்­றமை அவரின் விடா­மு­யற்­சியைக் காட்­டு­கி­றது. 

 

வாழ்க்­கையில் வெற்றி பெற தியாகம் தேவை. உழைப்புத் தேவை. பணிவு தேவை. பொறுமை தேவை. 

 

“உங்கள் வாழ்க்­கையில் மறக்க  இய­லாத சம்­பவம் எது?” எனக் கேட்டோம்.


“சினிமா வாய்ப்பைத் தேடி சென்­னையில் அலைந்து திரிந்த போது ஏற்­பட்ட இடை­யூறு, ஏமாற்றம், கவலை, தாழ்­வு­ம­னப்­பான்மை, துன்பம், பதற்றம், பல­வீனம் என அனைத்­துமே மறக்க இய­லா­தவை. வெளி­யு­ல­கத்தை வெளிச்சம் போட்டு காண்­பிப்­ப­துவே திரைப்­படம்.  

 

அத­னால் தான் அதன் திரையும் வெண்மை நிறத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் என் மனதும் இறந்த காலத்தை வெண்­மை­யாக்கிக் கொண்­டது. 

 

முன்னர் ஒருநாள், படிப்பை இடை­நி­றுத்தி கொழும்பில் புடவை நிலையம் ஒன்றில் தொழில்­பு­ரிய எனது அண்ணன் அழைத்துச் சென்றார்.

 

அங்கு அன்று நடந்த சம்­பவம்  என்னைக் காயப்­படுத்தி­ அழ­வைத்­து­விட்­டது. அவ் ­வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரிடம் “தம்பி இரவில் படிக்க வேண்டும். அவன் படிப்பில் ஆர்­வ­முள்­ளவன்” என எனது அண்ணன் கூறினார்.

 

ஆனால், அவ் ­வர்த்­தக நிலைய உரி­மை­யாளர் அதி­ர­டி­யாக “ஒன்று படிக்க வையுங்க. இல்லாவிட்டால் வேலை செய்ய வையுங்க. இது தெரியாதா உங்களுக்கு” என  வார்த்தைகளை கொட்டினார்.

 

என்னால் அவரின் பேச்சை ஜீரணிக்க இயலவில்லை. ஆனால், அதே நிலையத்தில் தொழில் செய்தேன்.

 

எனது வேலையின் திறமைகளைப் பார்த்து எங்களை கேவலப்படுத்திய அவ்வுரிமையாளர் தனது மற்றைய வர்த்தக நிலையத்துக்கு மாற்றம் செய்தார். அவரின் அவ் வார்த்தைகள் என்றும் மறக்க இயலாதவை.

 

சென்னையில் பெற்றுக்கொண்ட வசை சொற்களை விட இவ் வார்த்தைகள் என் மனதுக்குள் ஆல மரமாக வளர்ந்துவிட்டன” என தெரிவித்தார் நடிகர் குணா. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.