Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
குண்டுப் பெண் வேடத்தில் செட்டிலாகிவிட வேண்டுமென நாடக ஆசிரியர் கூறினார் - நடிகை கேட் வின்ஸ்லெட்
2016-02-21 09:22:26

தனது இளமைக் காலத்தில் நாடகங்களில் நடிக்கும்போது, உடற்பருமன் மிகுந்த சிறுமி வேடங்களில் தான் செட்டிலாகி விட வேண்டும் என தனது நாடக ஆசிரியர் கூறியதாக நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். 

 

டைட்டானிக் திரைப்படப் புகழ் நடிகையான கேட் வின்ஸ்லெட், BAFTA எனும் பிரித்தானிய திரைப்பட விருது வழங்கல் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

 

ஸ்டீவ் ஜொப்ஸ் எனும் திரைப்படத்தில் அப்பிள் நிறுவனத்தின் விற்பனைத்துறை நிறைவேற்று அதிகாரி ஜொனா ஹோப்மன் வேடத்தில் நடித்தமைக்காக கேட் வின்ஸ்லெட்டுக்கு இவ் விருது வழங்கப்பட்டது.

 

இவ் விருதை பெற்றுக்கொண்டு உரையாற்றுகையிலேயே கேட்ஸ் வின்ஸ்லெட் (40) மேற்கண்டவாறு கூறினார். 

 

“நான் 14 வயது சிறுமியாக இருந்தபோது, குண்டுப் பெண்கள் வேடத்தில் செட்டிலாக முடிந்தால் அதில் மகிழ்ச்சியடைய வேண்டும் என எனது நாடக ஆசிரியர் கூறினார்.

 

இதன் மூலம் நான் என்ன உணர்கிறேன் என்றால், எந்த இளம் பெண்ணும் அவர்களின் ஆசிரியராலோ, நண்பராலோ அல்லது பெற்றோரால் கூட எதிர்மறையாக கூறப்பட்டால் அதை செவிமடுக்காதீர்கள்.

 

ஏனெனில் நான் அதைத்தான் செய்தேன். நான் தொடர்ந்து சென்று எனது அச்சத்தை வென்றேன்” என கேட் வின்ஸ்லெட் கூறினார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.