Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விளையாட்டில் ஜெயிக்கும் தமிழ் சினிமா
2016-02-19 17:01:56

தமிழ் சினி­மாவில் பேய்­பட சீசன் நில­வு­வது போலவும், பேய் படங்­கள்தான் வெற்றி பெறு­வது போலவும் ஒரு மாயத்­தோற்றம் நில­விக்­கொண்­டி­ரு­கி­றது.

 

ஆனால் நிஜத்தில் தமிழ் சினிமா விளை­யாட்­டில்தான் ஜெயித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

 

ஸ்போர்ட்ஸ் மூவி என்ற வரை­மு­றைக்குள் சில படங்கள் வரா­விட்­டாலும் அதை நோக்­கிய கதை­க­ளால வெற்றி பெற்று வரு­கி­றது.

 

இந்த விளை­யாட்டு சினி­மாவின் வெற்­றிக்­க­ணக்கை துவக்கி வைத்­தது சுசீந்­த­ரனின் முதல் பட­மான ‘வெண்­ணிலா கப­டிக்­குழு. நமது மண்ணின் விளை­யாட்­டான கப­டியை மைய­மாக கொண்டு அதில் உள்ள உள்ளூர் அர­சி­யலை கொண்டு வெளி­வந்து அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­திய படம்.

 

பிரபு சாலமன் இயக்­கத்தில் சிபிராஜ் நடித்த லீ படம் கால்­பந்து கதை களம் கொண்­டது.

 

சிபி­ராஜின் வெற்றி படங்­களில் அது முக்­கி­ய­மா­னது. அறி­வ­ழகன் இயக்­கிய வல்­லினம் கூடைப்­பந்தை மைய­மாக கொண்­டது.

 

கிரிக்கெட்

 

கிரிக்­கெட்டை வைத்து நிறைய படங்கள் வந்து விட்­டது. அதில் முக்­கி­ய­மா­னது சென்னை 28. உள்ளூர் கிரிக்­கெட்டை மைய­மாக கொண்­டது.

 

அந்த படம்தான் வெங்­கட்­பி­ர­புவை இயக்­கு­ந­ராக அடை­யாளம் காட்­டி­யது, ஜெய், மிர்சி சிவா, விஜய் வசந்த், என பல நடி­கர்­களை கொடுத்­தது.

 

கிரிக்கெட் வீரர் சட­கோபன் ரமேஷ் கிரிக்கெட் பயிற்­சி­யா­ள­ராக நடித்த ‘போடா போடி’ காமெடி பட­மாக கலெக் ஷன் பார்த்து. சுசீந்­திரன் தேசிய கிரிக்­கெட்டில் நிலவும் சாதி, அர­சியல், பண விளை­யாட்டை அப்­ப­டியே 'ஜீவா' படத்தில் காட்­டினார். ஆடாம ஜெயிப்­போ­மடா என்ற காமெடி படம் கிரிக்கெட் பெட்­டிங்கை அப்­பட்­டாக, கொம­டி­யாக சொன்­னது.

 

குத்­துச்­சண்டை
குத்துச் சண்­டையை மைய­மாக கொண்டும் பல படங்கள் வெளி­வந்­தது. அதில் முக்­கி­ய­மா­னது பூலோகம்.

 

வட சென்­னையில் ஒரு காலத்தில் பாரம்­ப­ரி­ய­மான விளை­யாட்­டாக இருந்த குத்துச் சண்­டையை பதிவு செய்­த­தோடு. சர்­வ­தேச குத்துச் சண்­டையில் இருக்கும் வியா­பார அர­சி­யலை தெளி­வாக உணர்த்­தி­யது.

 

‘மான் கராத்தே’ படம் குத்துச் சண்­டையை கமர்­ஷியல் சினி­மா­வாக காட்­டி­யது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக இறு­திச்­சுற்று குத்­துச்­சண்டை உல­கத்­தையே திரைக்கு கொண்டு வந்­தது. ஒரு அரசு பணிக்­காக உயிரை பணயம் வைக்கும் அப்­பாவி மக்­களின் வாழ்க்­கையை சொன்­னது.

 

தட­களம்
‘எதிர்­நீச்­சலும்’, ‘ஈட்­டி’யும் தட­கள விளை­யாட்டை பேசி­யது. தனக்­கென ஒரு அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளவும் காதலி முன் தலை நிமிர்ந்து நிற்­கவும் ஓட்­டத்தில் ஹீரோ வென்று காட்­டு­வது எதிர்­நீச்சல் கதை, உடல் ரீதி­யாக ஒரு குறை இருந்தும் அந்த குறை­யு­ட­னேயே தடை­தாண்டும் ஓட்­டத்தில் தடை­தாண்டி வெல்லும் வீரனின் கதை ஈட்­டியில்.

 

கேரம் போர்ட் பற்றி சுண்­டாட்டம், 5 பேர் விளை­யாடும் கால்­பந்து பற்றி ஐவ­ராட்டம் என சிறு­சிறு படங்கள் கூட வந்­தி­ருக்­கி­றது. இப்­படி விளை­யாட்டை தொட்ட படங்கள் பெரும்­பாலும் வெற்­றியை தொட்­டி­ருக்­கி­றது.

 

அல்­லது பாராட்டை அள்­ளி­யி­ருக்­கி­றது. மேலே குறிப்­பிட்ட எந்த படமும் சோடை போக­வில்லை என்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டியது அவசியம்.

 

இறுதி சுற்றின் வெற்றி மேலும் சில விளையாட்டு படங்களுக்கு பாதை போட்டு கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த விளையாட்டு படங்களின் வெற்றியே சாட்சி.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.