Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
காதலிக்க நேரமில்லை-கேத்தரின் தெரசா
2016-02-19 15:59:06

நீதான் வேணும் கல்­யாணம் பண்­ணிக்­கி­றியா? ‘மெட்ராஸ்’ படத்தில் மெர்சல் செய்த கேத்ரின் தெர­சாவை அவ்­வ­ளவு சுல­பத்தில் மறந்­து­விட முடி­யாது. 

விஷா­லுடன் ‘கத­களி’ ஆடி­விட்டு இப்­போது அதர்­வா­வுடன் ‘கணிதன்’ பட ரிலீ­ஸுக்­காகக் காத்­தி­ருந்­த­வ­ருடன் ஒரு ஸ்வீட் சேட்டிங்….

 

தமிழ், தெலுங்கு, மலை­யாளம், கன்­னடம் என பல மொழி­களில் நடிப்­பது எப்­படி இருக்­கி­றது?

 

எனக்கு இதுவே கம்­மின்னு தோணுது. மொழிங்­கி­றது எந்தக் கலைக்கும் தடை­கி­டை­யாது. இங்கே கிடைக்­காத ஒரு ரோல் அங்கே கிடைக்­குது.

 

அங்கே வராத ஒரு ரோல் இங்கே வருது. தமிழ்ல எனக்குக் கிடைச்ச ரோல்ஸ் ரொம்பப் பிடிச்­சி­ருக்கு. ‘மெட்ராஸ்’ கலை­ய­ரசி,  ‘கணிதன்’ அனு ரெண்­டுமே ரொம்ப எனக்கு ஸ்பெஷல் இனி இப்­படி முக்­கி­யத்­துவம் இருக்கும் கதா­பாத்­தி­ரங்­கைளத் தான் தேர்ந்­தெ­டுக்­க­ணும்னு இந்த அனு­ப­வத்தில் இருந்து கத்­துக்­கிட்டேன்.

 

 ‘கணிதன்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

 

மெட்ராஸ் க்குப் பிறகு நான் கமிட் ஆன படம். ஆனா மூணா­வது படமா ரிலீஸ் ஆகுது. இயக்­குநர் சந்தோஷ். கதை சொன்ன விதமே நல்லா இருந்­தது. ஃப்ரெஷ்­ஷான கதை. ரிப்­போர்ட்­டரா நடிச்­சி­ருக்கேன்.

 

ஒரு சீன்ல என் தலையை மீன் தொட்­டிக்­குள்ள மூழ்­க­வெச்சு எடுக்­க­ணும்னு சொன்­னாங்க. ரொம்­பவே பயந்து நடுங்கி ஒரு வழியா அந்த ெஷாட் எடுத்து முடிச்சோம். அந்த சீனை பார்க்­கி­ற­துக்­கா­கவே படத்தை ரொம்ப ஆவலா எதிர்­பார்க்­கிறேன்.

 

 

 

ரிப்­போர்ட்டர் கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏதேனும் ஹோம்வொர்க் செய்­தீர்­களா?

 

இல்லை…. அந்த மாதிரி எதுவும் பண்­ணலை. ஆனா இயக்­கு­ந­ரோட நிறைய டிஸ்கஸ் பண்­ணினேன். அப்­புறம் உங்­களைப் போல பல ரிப்­போட்­டர்­களைச் சந்­திச்­சம் அவங்க கேள்வி கேட்கும் விதத்தைப் பார்த்துத் தெரிஞ்­சுக்­கிட்ட விட­யங்­களும் ரொம்­பவே உத­வியா இருந்­தது.

 

தனி ஹீரோ­யி­னாவும் நடிக்­கி­றீர்கள்… மல்டி ஹீரோயின் சப்­ஜெக்ட்­லயும் நடிக்­கி­றீர்­களே…?

 

ஒரு படத்­துல என்­னோட கதா­பாத்­திரம் என்ன பண்­ணு­துங்­கி­ற­துதான் எனக்கு முக்­கியம். அதை விட்­டுட்டு கூட இவங்க இருக்­காங்­களே நாம கவ­னிக்­கப்­ப­டாமப் போயி­டு­வோ­மோனு யோசிக்க மாட்டேன்.

 

 

நான் பண்ற  வேலை­யில என்­னோட பெஸ்ட்டைக் கொடுக்­க­ணும்னு நினைப்பேன். அப்­படி ருத்­ர­மா­தேவி படத்­துல நடிச்­சது ஒரு நல்ல அனு­பவம். அனுஷ்கா மாதி­ரி­யான திற­மை­யா­ன­வங்­கக்­கூட நடிக்கும் சூழல் அமைஞ்­சது. ஸ்வீட்டி ரொம்ப ஸ்வீட்.

 

நடிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம்?

 

புத்­த­கங்கள் படிக்­கி­றது. ஃப்ரீயான நேரங்­கள்ல குட்டித் தூக்கம் போடு­றது பிடிக்கும். சுத்தி இருக்­கிற பொருட்­களை  அடுக்கி வைக்கப் பிடிக்கும்.

 

அப்­புறம் பியானோ. க்ளாஸ் போய்க் கத்துக் கிட்ட விடயம் அது. நல்­லாவே வாசிப்பேன்.

 

அடிக்­கடி நினைத்துச் சிரிக்கும் விஷயம்?


நான் பிறந்­தது கேரளா. ஆனா மலை­யாளம் சரியா பேச வராது. இந்தி தெலுங்­குனா பொளந்து கட்­டி­டுவேன். மலை­யா­ளத்தில் பேசினா எனக்கே சிரிப்பு வந்­துடும்.

 

மறக்க முடி­யாத பாராட்டு?

 

“வர­லாறு படத்தின் கன்­னட வெர்ஷன் காட்­பா­தர்ல கனிகா நடிச்ச ரோல்ல நடிச்­சி­ருந்தேன். அந்தப் படத்­துக்­காக நிறையப் பேர் பாராட்­டி­னாங்க.”

 

வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல்?

 

வேல்­னடைன்ஸ் டேவே ஸ்பெஷ­லான ஒண்­ணுதான். ஆனா எனக்கு அது அவ்வளவு ஸ்பெஷலா இருக்காது. நல்ல விஷயம்தான். ஆனா அதுக்கு இப்போ டைமும் இல்லை.

 

அப்படி ஒரு யோசனையும் இல்லை. இருந்தாலும் எல்லா லவ்வர்ஸுக்கும் ஹேப்பி வேலைன் டை ன்ஸ் டே சொல்லிக் கொள்கிறேன்.”

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.