Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சுட்டுக்கொல்லப்பட்ட விமானப் பணிப்பெண் வேடத்தில் சோனம் கபூர் நடிக்கும் நீர்ஜா இன்று வெளியாகுகிறது
2016-02-19 11:40:00

நடிகை சோனம் கபூர் பிர­தான வேடத்தில் நடித்த நீர்ஜா திரைப்­படம் இன்று வெள்­ளிக்­கி­ழமை வெளி­யா­க­வுள்­ளது. 

 

1986 ஆம் ஆண்டு இடம்­பெற்ற பான் எம். 73 விமானக் கடத்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்ட திரைப்­படம் இது.

 

குறிப்­பாக 359 பேரை பாது­காப்­பத்தில் தனது உயிரை தியாகம் செய்த இளம் விமானப் பணிப்­பெண்­ணான நீர்ஜா பெனோட்டை பிர­தா­னப்­ப­டுத்தி இப்­படம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவரின் பெயரே இப்­ப­டத்­துக்கு சூட்­டப்­பட்­டுள்­ளது. 

 

பான் எம். 73 விமானக் கடத்­தலும் நீர்ஜா பெனோட்டின் தீரச்­செ­யலும் மெட்ரோ நியூஸ் வாச­கர்கள் ஏற்­கெ­னவே அறிந்­த­வைதான். 

 

1986 செப்­டெம்பர் 5 ஆம் திகதி மும்­பை­யி­லி­ருந்து புறப்­பட்டு, பாகிஸ்­தானின் கராச்சி, ஜேர்­ம­னியின் பிராங்பேர்ட் நக­ரங்­க­ளுக்­கூ­டாக நியூயோர்க் நகரை அடை­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் பான்.எம். 73 விமானம் கராச்­சியில் வைத்து விமானக் கடத்தல் குழு­விடம் சிக்­கி­யது.

 

கராச்சி விமான நிலைய பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் போன்று சீருடை அணிந்த ஆய­த­பா­ணிகள் நால்வர் விமா­னத்­துக்குள் நுழைந்­தனர்.

 

360 பய­ணிகள், 19 ஊழி­யர்­க­ளுடன் கூடிய அவ்­வி­மா­னத்தை 17 மணித்­தி­யா­லங்கள் கடத்தல் குழு­வினர் தடுத்­து­வைத்­தனர். 

 

21 பய­ணி­களை கடத்தல் குழுவினர் சுட்­டுக்­கொன்ற நிலையில், பாகிஸ்தான் பாது­காப்புப் படை­யினர் அவ்­வி­மா­னத்தை முற்­று­கை­யிட்டு ஆயு­த­பா­ணி­களை கைது செய்­தனர். 

 

 இதன்­போது பய­ணிகள் குழு வொன்று தப்பிச் செல்­வ­தற்கு உதவும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த விமான ஊழி­ய­ரான நீர்ஜா பெனோட் (23) கடத்தல் குழு­வி­னரால் சுடப்­பட்டு உயி­ரி­ழந்தார்.

 

அமெ­ரிக்கா, இந்­தியா, பாகிஸ்தான் நாடு­களின் உயர் விரு­துகள் நீர்­ஜா­வுக்கு வழங்­கப்­பட்­டன. அவரின் வேடத்­தி­லேயே சோனம் கபூர் (30) நடித்­துள்ளார்.

 

நீர்ஜா பெனோட்டின் தாயார் ரமா பெனோட் வேடத்தில் ஷோபனா ஆஸ்மி நடித்துள்ளாராம் மத்­வானி இயக்­கிய இப்­ப­டத்தை பொக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறு­வனம் தயாரித்துள்ளது.

 

(தொடர்புடைய கட்டுரை)

 

* 359 பேரை பாதுகாப்பதில் தனது உயிரைத் தியாகம் செய்த விமான ஊழியர் நீர்ஜா பெனோட்

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.