Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தொலைக்காட்சித் தொடருக்காக ஜேம்ஸ்பொன்ட் வேடத்தை கைவிடுகிறார் டேனியல் கிறேக்?
2016-02-19 10:08:34

பல வருடங்களாக ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடித்து வந்த புகழ்பெற்ற நடிகர் டேனியல் கிறேக், இப்பாத்திரத்தில் நடிப்பதிலிருந்து விலகி, தொலைக்காட்சித் தொடரொன்றில் நடிக்கவிருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

 

2006 ஆம் ஆண்டு வெளியான கஸினோ ரோயல்ஸ் திரைப்படத்தில் முதல் தடவையாக ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் டேனியல் கிறேக் நடித்தார்.

 

அதன்பின் குவான்டம் ஒவ் சோலாஸ் (2008), ஸ்கை போல்ஸ் (2012), ஸ்பெக்ரர் (2015) ஆகிய திரைப்படங்களிலும் ஜேம்ஸ்பொன்ட் வேடத்தில் அவர் நடித்தார். 

 

கடந்த வருடம் ஸ்பெக்ரர் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னர், தான் மற்றொரு ஜேம்ஸ் பொன்ட் படத்தில் நடிப்பதற்கு விரும்பவில்லை என டேனியல் கிறேக் கூறினார். 

 

இந்நிலையில், “பியூரிட்டி” எனும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்கு 47 வயதான டேனியல் கிறேக் தயாராகி வருகிறார்.

 

பல வருடங்களுக்கு இத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

 

இதனால், ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடிப்பதை டேனியல் கிறேக் நிறுத்திக்கொள்வார் எனக் கருதப்படுகிறது. 

 

மற்றொரு ஜேம்ஸ் பொன்ட் படத்திலும் டேனியல் கிறேக்கை நடிக்க வைப்பதற்கு தாம் முயற்சிப்பதாக ஜேம்ஸ் பொன்ட் படத் தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர்.

 

எனினும் இதுவரை மற்றொரு ஜேம்ஸ் பொன்ட் படத்தில் டேனியல் கிறேக் நடிப்பாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.