Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஒஸ்கார் விழாவுக்கான ஆடை வேட்டை ஆரம்பம் – பிரியங்கா சோப்ரா
2016-02-14 11:59:39

எதிர்­வரும் ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் விரு­தொன்றை கைய­ளிப்­ப­தற்குத் தான் அழைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நடிகை பிரி­யங்கா சோப்ரா பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்ளார். 

 

பொலிவூட் நடி­கை­யான  பிரி­யங்கா சோப்­ராவின் புகழ் ஹொலிவூட்டிலும் வேக­மாக பரவி வரு­கி­றது.

 

அமெ­ரிக்­காவின் ஏ.பி.சி. தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையில் ஒளி­ப­ரப்­பாகும் குவான்­டிகோ தொடரில் பொலிஸ் அதி­கா­ரி­யாக நடிக்கும் பிரி­யங்கா சோப்­ரா­வுக்கு அண்­மையில் பீப்பள்ஸ் சொய்ஸ் வருது வழங்­கப்­பட்­டது. இவ்­வி­ருதை வென்ற முதல் தெற்­கா­சியர் பிரி­யங்கா ஆவார். 

 

ஏதிர்­வரும் 28 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் விரு­தொன்றை கைய­ளிப்­ப­தற்குத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருப்­பதன் மூலம் இப்­பெ­ரு­மையைப் பெறும் முதல் இந்­தி­ய­ரா­கிறார் பிரி­யங்கா. 

 

இது குறித்து பிரி­யங்கா சோப்ரா கூறு­கையில், “உலகின் உச்­சியில் என்னை உண­ரச்­செய்யும் அனைத்­துக்கும் நான் கட­மைப்­பட்­டுள்ளேன். இவ்­வி­ருது வழங்கல் விழாவை நான் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருக்­கிறேன்.

 

 இவ்­வி­ழாவில் அணி­வ­தற்­கான ஆடைக்­கான வேட்டை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது என பிரி­யங்கா சோப்ரா தெரி­வித்­துள்ளார். 

 

“குவான்­டிகோ தொடரின் இரு அத்­தி­யா­யங்­க­ளுக்­காக கன­டாவின் மொன்ட்­ரீயல் நகரில் உறை­ய­வைக்கும் குளிரில் உறக்­க­மின்றி படப்­பி­டிப்­பு­களில் பங்­கு­பற்­றி­ய­மைக்கு பலன் கிடைத்­துள்­ளது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

 

17 வயதில் மும்­பையில் சாதா­ரண ஒரு யுவ­தி­யாக இருந்த நிலையில் இருந்­ததை நினைவு கூரும் பிரி­யங்கா சோப்ரா, தற்­போது நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரங்­களில் தனது முகம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப் பதா­கைகள் காட்­சிப்ப டுத்­தப்­பட்ட அள­வுக்கு முன்னெறியுள்ளார்.

 

எதிர்­கா­லத்தில் அவர் ஒஸ்கார் விருதை வென்­றாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.