Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சன்னி லியோனுக்கு விருந்தளித்த அமீர் கான்
2016-02-14 10:28:22

பொலிவூட்டின் முன்­னிலை நடி­கர்­களில் ஒரு­வ­ரான அமீர்கான், நடிகை சன்னி லியோனை அண்­மையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். 

 

ஓரு காலத்தில் ஆபாசப் பட நடி­கை­யாக விளங்கி, தற்­போது பொலிவூட்டின் பிர­பல நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்கும் சன்னி லியோனை தொலைக்­காட்­சி­யொன்­றுக்­காக செவ்வி கண்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தினார். 

 

சன்னி லியோனின் கடந்த காலம் குறித்து மீண்டும் மீண்டும் அந்த ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பி­ய­மையும், சன்னி லியோன் சம­யோ­சி­த­மாக பதி­ல­ளித்­த­மையும் பல­ராலும் பேசப்­பட்­டது. 

 

உங்­களைப் போன்ற ஒரு­வ­ருடன் நடிகர் அமீர்கான் இணைந்து நடிப்பார் என எண்­ணு­கி­றீர்­களா சன்னி லியோ­னிடம் கேட்­ட­போது, பெரும்பாலும் நடிக்க மாட்டார் என எண்­ணு­கிறேன் என சன்னி லியோன் பதி­ல­ளித்­தி­ருந்தார். 

 

சன்னி லியோனின் இந்த செவ்­வியை பார்த்­த­போது தான் கவ­லை­ய­டைந்­த­தா­கவும் பொருத்­த­மான கதை கிடைத்தால் சன்னி லியோ­னுடன் இணைந்து பணி­யாற்­று­வதில் தனக்குப் பிரச்­சினை எது­வு­மில்லை எனவும் அமீர்கான் தெரி­வித்­தி­ருந்தார். 

 

இந்­நி­லையில் அமீர் கானின் டன்கால் திரைப்­ப­டத்­துக்­கான படப்­பி­டிப்பு 10 நாட்­க­ளாக டில்­லியில் நடை­பெற்­றது.

 

இப்­ப­டப்­பி­டிப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த அமீர்கானிடம், புர­மோ­ஷனல் பணி­யொன்­றுக்­காக சன்னி லியோன் டில்லி வந்­தி­ருக்கும் விடயம் தெரி­விக்­கப்­பட்­டது. 

 

அதை­ய­டுத்து சன்னி லியோ­னையும் அவரின் கணவர் டேனியல் வெப­ரையும் அமீர் கான் மதிய உணவு விருந்­துக்­காக தான் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு அழைத்தார்.

 

பல மணித்­தி­யா­லங்கள் இவர்­க­ளுக்­கி­டை­யி­லான உரை­யாடல் நீடித்­தது. 

 

சன்னி லியோ­னுடன் இணைந்து நடிப்­பதில் தனக்குப் பிரச்­சினை எது­வு­மில்லை என்­பதை அமீர் கான் மீண்டும் தெளி­வு­ப­டுத்­தினார்.

 

மறுநாள் அமீர் கானின் படப்­பி­டிப்புத் தளத்­துக்கும் சன்னி லியோன், டேனியல் வெபர் ஆகியோர் சென்றனர்.

 

அமீர் கான் கெமராவுக்கு முன்னால் நடிப்பதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சன்னி லியோன், விடைபெறும்போது அமீர்கானை கட்டித் தழுவினார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.